அல்ஜீப்ராவை புரிந்துகொள்ள ஒரு எளிய வழி

அல்ஜீப்ராவை புரிந்துகொள்ள ஒரு எளிய வழி

அல்ஜீப்ரா என்றால் சில மாணவர்களுக்கு அலர்ஜி வந்துரும். அல்ஜீப்ரானா கோப்ராவை பார்த்த மாதிரி சில மாணவர்கள் அலறுவார்கள். ஆனால் புரிந்து படித்தால் அல்ஜீப்ரா அல்வாதான்.

ஒரு எடுத்துகாட்டு பார்க்கலாமா? எல்லாருக்கும் தெரிஞ்ச பார்முலா

(a+b)2=a2+b2+2ab

இது எப்படி வந்ததுன்னு பார்க்கலாமா?

ஒரு சதுரத்தை எடுத்துகொள்வோம். படத்தில் காட்டியபடி எதாவது ஒரு புள்ளியில் நேர்கோட்டிலும், கிடைமட்டகோட்டிலும் இரண்டாக பிரிப்போம். ஒவ்வொரு பக்கத்திலும் பிரித்த பகுதிகளுக்கு a என்றும், b என்றும் பெயரிடுவோம்.

இப்போது சதுரத்தின் உள்ளே 2 சதுரங்களும், 2 செவ்வகங்களும் வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது. அந்த 2 சதுரத்தின் பரப்பளவு a2, மற்றும் b2 ஆகும். அதுபோலவே 2 செவ்வகங்களின் பரப்பளவு axb + axb = 2abஆகும். எனவே மொத்த பரப்பளவு a2+b2+2ab ஆகிறது

இது மொத்த சதுரத்தின் பரப்பளவுக்கு சமமாகிறது. அதுவே (a+b)2=a2+b2+2ab

இவ்வாறு ஒவ்வொரு பார்முலாவுக்கும் நாம் இப்படி படம் போட்டு புரிந்து படித்தால் அல்ஜீப்ரா நமக்கு இனிக்கும்.

ஜெயந்தி நாதன்

https://www.facebook.com/jayanthi.nathan.54

Share This Post