ஆயகலைகள் 64

ஆயகலைகள் 64

ஆயகலைகள் அறுபத்திநான்கு என்பது நமக்கு தெரியும். ஆனால் ஒருவருடைய வாழ்நாளில் இந்த 64கலைகளையும்ஒருவரால் கற்றுக்கொள்ளமுடியுமா? ஒரு காலத்தில் அனைத்து கலைகளையும் கற்றவர்கள் இருந்தார்களாம். கல்வியின் நாயகி கலைவாணி அனைத்து கலைகளையும் அறிந்தவள். அவளுடைய அருள் இருந்தால் கற்றுக்கொள்ளலாம். அப்பிடியே கற்றுக்கொண்டாலும் அது நம்முடைய வாழ்க்கையில் உபயோகமாகுமா? இவ்வளவு கலைகளையும் கற்றுக்கொள்ளவே வாழ்வின் பெரும்பகுதி போய்விடும். பிறகு வயதாகிவிடுவதால் அதனுடைய உபயோகமும் நமக்கு பலன்தராது. ஆனால் தேவைப்படுகிறவர்களுக்கு தேவைப்படுகிற கலைகளை கற்றுக்கொடுக்கலாம்.

சில கலைகள் நமக்கு ஏற்கனவே தெரியும். இன்னும் நாம் எத்தனை கற்றுக்கொள்ளலாம் எவை நம்முடைய வாழ்வில் உபயோகமாகும் என்று பார்ப்போம். அந்த பட்டியல் உங்கள் பார்வைக்கு இங்கே கொடுத்து இருக்கிறோம்.

 1. அக்கரவிலக்கணம் (எழுத்துப்பயிற்சி)
 2. இலிகிதம் (கையெழுத்துப் பயிற்சி)
 3. கணிதம்
 4. வேதம்
 5. புராணம்
 6. வியாகரணம் (இலக்கணம்)
 7. நீதி சாஸ்த்திரம்
 8. ஜோதிட சாஸ்த்திரம்
 9. தர்ம சாஸ்த்திரம் (சட்டம்)
 10. யோக சாஸ்த்திரம் (யோகா பயிற்சி)
 11. மந்திர சாஸ்த்திரம்
 12. சகுன சாஸ்த்திரம்
 13. சிற்ப சாஸ்த்திரம்
 14. வைத்திய சாஸ்த்திரம்
 15. உருவ சாஸ்த்திரம் (சாமுத்த்ரிகா இலட்சணம்)
 16. இதிகாசம்
 17. சரித்திர அறிவு
 18. அலங்காரப் பயிற்சி
 19. மதுரபாடணம் (சகலமொழி அறிதல்)
 20. நாடகம்
 21. நிருத்தம் (நடனம்)
 22. சத்தப்பிரம்மம் (சத்தத்தை வைத்து ஒருவரது குணம் அறிதல்)
 23. வீணைப்பயிற்சி
 24. புல்லாங்குழல் பயிற்சி
 25. மிருதங்கப் பயிற்சி
 26. காலநிர்ணையப் பயிற்சி
 27. அஸ்திரம் அல்லது ஆயுத்தப்பயிற்சி
 28. தங்கத்தை சோதிக்கும் பயிற்சி
 29. தேர் ஓட்டுதல் (வாகனம் ஓட்டுதல்)
 30. யானையேற்றம்
 31. குதிரையேற்றம்
 32. இரத்தினக்கல் சோதித்தல்
 33. மண்ணை சோதிக்கும் பயிற்சி
 34. சங்கராம இலக்கணம் (படைகளை வழிநடத்துதல்)
 35. மல்யுத்தம்
 36. ஆகருடணம் (கவர்ச்சிக்கலை)
 37. உச்சாடணம் (மந்திரம் மூலம் பேய்களை ஏவுதல்)
 38. வித்து வேடணம் (அதிர்ச்சி ஏற்படுத்துதல்)
 39. மன்மதக்கலை (காதல்)
 40. மோகனம் (வசியக்கலை)
 41. வசீகர கலை
 42. ரசவாதம் (ஒரு பொருளை மற்றொன்றாக செய்தல்)
 43. காந்தர்வ வாதம் (குழு வாத்தியப் பயிற்சி)
 44. பைப்பீல் வாதம் (மிருகங்களின் குணங்களை அறிதல்)
 45. கவுத்துக வாதம் (ஆறுதல் கூறும் பயிற்சி)
 46. தாது பயிற்சி
 47. விஷத்தை முறிக்கும் பயிற்சி
 48. நஷ்டத்தை அறியும் திறன்
 49. கைரேகை சாஸ்த்திரம்
 50. ஆகாயத்தில் மறைதல்
 51. ஆகாயத்தில் நடத்தல்
 52. கூடுவிட்டு கூடு பாய்தல்
 53. தானே மறைதல்
 54. அதிசயமானவற்றை வரவழைத்தல்
 55. ஆகாயத்திலும் பூமியிலும் அதிசயம் செய்தல்
 56. நெருப்பில் நடத்தல்
 57. நீரில் நடத்தல்
 58. காற்றில் நடத்தல்
 59. திட்டி ஸ்தம்பம் (கண் பயிற்சி)
 60. வாக்கு ஸ்தம்பம் (வாய் பயிற்சி)
 61. சுக்கில ஸ்தம்பம் (மனதை அடக்குதல்)
 62. கன்ன ஸ்தம்பம் (மறைந்தவற்றைப் பார்த்தல்)
 63. கடகஸ்தம்பம் (யுத்த ஆயுதங்களை கைப்பற்றுதல்)
 64. அவஸ்தை பிரயோகம் (ஆத்மாவை இயக்குதல்)

நம்முடைய சித்தர்கள் இதில் நம்மால் முடியாத கலைகளை தெரிந்து வைத்திருந்தனர். எனவே அவர்களால் அற்புதங்கள் செய்யமுடிந்தது. எந்த கலையாக இருந்தாலும் நமக்கும் மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருப்பது மட்டும்தான் காலம் காலமாக அழியாமல் நம்முடன் வரும்.

Share This Post