இதெப்டி இருக்கு – 4?

இதெப்டி இருக்கு – 4?

ஒருமுறை பாரதியார் தனது மனைவி செல்லம்மாவுடன் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றிருந்தார். அப்போது கூண்டுக்குள் ஒரு சிங்கம், கம்பிக்கு அருகில் அமர்ந்திருந்தது. நேராக சிங்கத்தை நோக்கி சென்ற பாரதி, சிங்கத்தின் இருபுறமும் உள்ள பிடரியைப் பிடித்து, குழந்தைகளின் கன்னத்தை பிடித்து உலுக்குவது போல, “வனராஜா…நான்தான் கவிராஜா வந்திருக்கிறேன்…!” என்றவாறு உலுக்கினார். அவரின் நல்ல நேரத்திற்கு, சிங்கம் அவரை ஒன்றும் செய்யவில்லை. உடன் வந்திருந்த ஒரு நபர், இதைக்கண்டு அதிர்ந்ததோடு, செல்லம்மாவிடம், “என்னம்மா…உன் கணவன் இவ்வாறு நடந்துகொள்கிறார். நீ எதுவும் கேட்க மாட்டாயா?“ என்றவாறு கேட்டார். அதற்கு செல்லம்மா, “என்ன செய்வது? எவ்வளவோ சொல்லியாயிற்று. ‘கடவுளே அந்த சிங்கத்திற்காவது நல்ல புத்தியைக் கொடு என வேண்டிக்கொண்டேன்’ என்றார்…!

இதெப்டி இருக்கு…?!

Share This Post