இதெப்டி இருக்கு – 5?

இதெப்டி இருக்கு – 5?

ஒருமுறை ஹிட்லர் கடல்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒரு நிருபர், “நீங்கள் இதுவரை சந்தித்த அனைத்துப் போர்களிலும் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். எப்படி இது சாத்தியமானது?” என்றார்.

“அதற்குக் காரணம் எனது படை வீரர்கள் தான். எனது உத்தரவை சிறிதும் யோசிக்காமல் செய்வார்கள்” என்றார் ஹிட்லர்.

“என்ன சொன்னாலுமா?” என்றார் நிருபர்.

“ஆமாம்” என்றார் ஹிட்லர்.

“எங்கே? ஒருவரை இப்போது கடலில் குதிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.

காரணம் அப்போது கப்பல் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தது. நல்ல, திறமையான நீச்சல் வீரரும் திணறும் ஆழம். ஹிட்லர் புன்முறுவலுடன். ஒருவனை நோக்கி கை நீட்டினர்; வந்தான். “போய் கடலில் குதி என்றார்”.

விறுவிறுவென சென்று, துப்பாக்கியை தோளிலிருந்து கழட்டிவிட்டு கடலில் குதித்தான். ‘ஏன்?’ என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை; சிறிதும் தயங்கவும் இல்லை.

ஹிட்லர் இதைப்பார்த்துவிட்டு, நிருபரை ஒரு கர்வமான சிரிப்போடு ஏறிட்டு, பின் தனது அறைக்குள் சென்றுவிட்டார். உடனே, நிருபர் உட்பட சக வீரர்கள், கயிற்றின் உதவியோடு, குதித்த வீரரை மீட்டனர். பின் நிருபர் அவரிடம் தனியாக, “அவர் கூறினார் என்பதற்காக, யோசிக்காமல் குதிதுவிட்டயே..! நீ என்ன முட்டாளா? உனக்கு உன் குடும்பம் எதுவும் நினைவிற்கு வரவில்லையா?“ என்றார்.

அதற்கு அவ்வீரர், சுற்றிலும் பார்த்துவிட்டு, ”இவனிடம் வேலை பார்ப்பதற்கு, நான் கடலில் விழுந்து செத்திருப்பேன். உங்களை யார் காப்பாற்ற சொன்னது?” என கடிந்து கொண்டாராம்.

இதெப்டி இருக்கு…?!

Share This Post