இதெப்டி இருக்கு – 7?

இதெப்டி இருக்கு – 7?

சர்ச்சிலும், பெர்னார்ட்ஷாவும் சமகாலத்தவர்கள். இருவருக்கும் ஒத்துப்போகாது என்றாலும், ஒருவரையொருவர் எந்த ஒரு இடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலைகுனிவை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கில் இருவருமே நடந்துகொண்டதில்லை.

ஒருமுறை பெர்னார்ட்ஷா, சர்ச்சிலுக்கு தன்னுடைய நாடகத்தைக் காண்பதற்கான அனுமதிச்சீட்டுகள் 2-ஐயும், மேலும் ஒரு கடிதத்தையும் அத்துடன் இணைத்து அனுப்பி வைத்தார். அக்கடிதத்தில், “எனது நாடகத்தைக் காண வருவீர்கள் என்கிற நம்பிக்கையில், இச்சீட்டை அனுப்பி வைக்கிறேன். இன்னொரு சீட்டையும் அனுப்பியுள்ளேன், உங்கள் நண்பர் ஒருவரையும் அழைத்து வர; ஒருவேளை அப்படி யாரேனும் இருந்தால்!” என்று எழுதியிருந்தார். இவ்வாறு ஷா, சர்ச்சிலைத் தாக்கக் காரணம், சர்ச்சில் ஒரு சிடுமூஞ்சி. அவ்வளவாக யாரிடமும் பேசமாட்டார். அதனால்தான்.

அதற்கு பதில் கடிதம் ஒன்றை சர்ச்சில், ஷாவிற்கு அனுப்பினார். அதில், “உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் சொன்ன நாளில் எனக்கு வேறு ஒரு வேலை இருப்பதால், நீங்கள் கொடுத்தனுப்பிய டிக்கெட்டுகளைத் திருப்பி அனுப்பியுள்ளேன். முடிந்தால் மறுநாள் நான் உங்கள் நாடகத்தைப் பார்க்க டிக்கெட்டுகள் அனுப்பவும். மறுநாள் நிச்சயம் வருகிறேன். மறுநாளும் உங்கள் நாடகம் நடந்தால்!” என்று எழுதியிருந்தார். இவர் ஷாவை இவ்வாறு தாக்கியதற்குக் காரணம், ஷாவின் நாடகத்தை மறுநாளும் வந்து பார்க்கும் அளவிற்கு மக்களுக்கு பொறுமை இருக்காது; அவரது நாடகமும் அத்தனை சுவாரசியமாக இருக்காது, என்பதுபோல குத்திக்காட்டியே சாடினார்.

இதெப்டி இருக்கு…?!

Share This Post