எண்களும் தமிழர்களும்

எண்களும் தமிழர்களும்

நம்முடைய தமிழர்கள் பழங்காலத்தில் மண்ணிலுருந்து விண்ணைத்தாண்டியும் பல ஆராய்ச்சிகள் செய்து சாதித்து வந்திருக்கிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மிகம், மருத்துவம் என்று எல்லாத்துறைகளிலும் இப்பொழுது மேலைநாடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும்போது நம்மவர்கள் அந்த காலத்திலேயே அலசி ஆராய்ந்து பிரிச்சு மேஞ்சுட்டாங்கனு சொன்னா சும்மா பெருமை பீத்தாதீங்கனு நம்ம தமிழர்களே நம்மை குறை சொல்றாங்க. ஒரு வெள்ளைக்காரன் வந்து ஆமாம் இதெல்லாம் தமிழர்கள் பண்டைய வரலாற்றில் இருக்கிறது என்று சொன்னால்தான் நம்மவர்கள் நம்புகிறார்கள்.

கணிதத்தில் தமிழர்கள் எவ்வளவு மேன்மைபெற்று இருந்தார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாமா? நாம் இப்போது அதிகபட்சமாக கோடி என்பதையே ஒரு பெரிய எண்ணின் பெயராக உபயோகப்படுத்துகிறோம். அனால் அதற்கு மேலும் உள்ள எண்களுக்கு எப்படி பெயர் வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

1,00,00,000                     –  கோடி

10,00,00,000               – அற்புதம்

1,00,00,00,000               – நிகற்புதம்

10,00,00,00,000             – கும்பம்

1,00,00,00,00,000             – கணம்

10,00,00,00,00,000           – கற்பம்

1,00,00,00,00,00,000         – நிகற்பம்

10,00,00,00,00,00,000         – பதுமம்

1,00,00,00,00,00,00,000      – சங்கம்

10,00,00,00,00,00,00,000       – வெள்ளம்

1,00,00,00,00,00,00,00,000     – அந்நியம்

10,00,00,00,00,00,00,00,000     – மத்தியம்

1,00,00,00,00,00,00,00,00,000   – பரார்த்தம்

10,00,00,00,00,00,00,00,00,000   – புரியம்

1,00,00,00,00,00,00,00,00,00,000 – பிரம்கற்பம்

 

இறுதியாக உள்ள பிரம்கற்பத்திற்கு 21 சைபர்கள் உள்ளன.இதற்கு மேலும் உள்ள எண்களுக்கும் பெயர் வைத்திருகிறார்கள். ஆனால் நமக்கு இதற்கே தலை சுற்றுகிறது. ஒரு அறிவியல் கருவியும் இல்லாமல் எப்படி இவ்வளவு நுணுக்கமாக கணக்கிட்டு பெயர் வைத்து உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்று நினைத்தால் தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!! என்ற வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

Share This Post