எனக்குள் ஓர் வாதம்…!

எனக்குள் ஓர் வாதம்…!

  1. யார் மீது கோபப்படலாம்?

கூட்ட நெரிசலில் நிற்கும் மாணவர்களிடம் Bus pass கேட்கும் நடத்துனர்களிடம்.

  1. உலகிலேயே மிகப்பெரிய பொய் எது?

“ஒரு அறையில் மூன்று பெண்கள் எதுவுமே பேசாமல் அமைதியாக பத்து நிமிடம் இருந்தார்கள்” என்பதுதான்.

  1. உலகிலயே மிகவும் கஷ்டமான வேலை எது?

மனமின்றி செய்யும் வேலைதான்.

  1. ஆபாசம் என்பது?

உடையில் இல்லை, உடை அணிந்துகொள்ளும் விதத்தை பொறுத்தது.

  1. கடவுள் கண் முன் தோன்றி ஏதேனும் வரம் கேட்டால் என்ன கேக்கலாம்?

உண்மையான பக்தனுக்கு கடவுளிடம் எதுவுமே கேட்க தோணாது, ஒருவேளை கடவுள் நேரில் வந்தால் நாம் பயந்துஓடிவிடுவோம்.

  1. லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்யலாம்?

கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டுவதை முதலில் நிறுத்துங்கள். (கடவுளுக்கே லஞ்சம்..??!!)

  1. கடவுள்?

போற்றவோ, தூற்றவோ மனிதனுக்கு தேவைப்படும் ஒரு விஷயம்.

  1. தற்போதைய சூழ்நிலையில் நல்ல லாபகரமான தொழில் எது?

கல்வித்துறை..!ஒரு குழந்தை வளர்ந்து வேலைக்கு செல்வதற்குள், அதன் குடும்பத்தின் பெரும்பாலான சொத்துக்கள் பறிக்கப்படுகின்றன, கல்விக் கட்டணத்தின் பெயரால்.

  1. இந்த உலகில் வெறுத்து ஒதுக்க வேண்டிய நபர்கள் யார்?

பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் குழந்தைகளும், குழந்தைகளை அநாதை இல்லத்தில் விடும் பெற்றோர்களும்.

10. பின்லேடனை அமெரிக்காவே வளர்த்து விட்டது, பின் அவனை அழித்தது. இது எதை குறிக்கிறது?

ஆடு வளர்க்கிறது அழகு பார்க்கிறதுக்கு இல்ல, கோழி வளர்க்கிறது கொஞ்சுறதுக்கு இல்ல.

ரெண்டும் அறுக்குறதுக்குத்தான்.

 

Share This Post