இன்றைய கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க்கையே தோற்கடிக்கும் அளவிற்கு அபார நினவுத்திறன் கொண்ட “கவனகர்கள்” என்ற குழுவே அக்கால மன்னாராட்சிக் காலத்தில் இருந்தது. இக்கவனகர்கள், ஒரு நாட்டின் தூதுவன் கொண்டு வரும் செய்தியை ஒரு முறை கேட்டு மனதில் பதிய வைத்துக்கொள்வர். பின்னர் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் அச்செய்தியை அடிபிறழாமல் கால நேரத்தோடு கூறுவர், அவர்களுள், ஒரு முறை செய்தியைக் கேட்டாலே ஞாபகம் வைத்துக்கொள்ளும் “ஏக சந்த கிரகி”, இரு முறை செய்தியைக் கேட்டு ஞாபகம் வைத்துக்கொள்ளும் “த்துவா சந்த கிரகி”, என இரு பிரிவினர் இருந்தனர்.
கவனகம் அல்லது அவத்தனம் என்பது மன ஆற்றல் சக்தியாகும். இக்கலையை பல்வேறுபட்ட மக்கள் முன்னிலையில் வெளிக்காட்டினர்கள். இதன் மூலம் மக்கள் தங்களுக்குள் உள்ள நினைவாற்றல் சக்தியை புரிந்து கொண்டனர்.
அவர்கள் வம்சாவழியில் வந்த, அதே திறமைகளையும் உடைய இராம. கனகசுப்புரத்தினம் எனும் கவனகர் தற்போது கோவையில் வசிக்கிறார்.
இன்றைய கால கட்டத்தில் நம்மால் தொலைபேசி என்னை கூட ஞாபகத்தில் வைத்துக் கொள்வது கடினமாக உள்ளது. பின்னர் கவனகர்கள் உருவாவது எவ்வாறு ?