கேள்வியும் நானே பதிலும் நானே – 2

கேள்வியும் நானே பதிலும் நானே – 2

  1. உலகிலேயே மிகவும் கஷ்டமான வேலை செய்பவர்கள் யாவர்?

வேலை செய்துகொண்டே இருந்துவிட்டு சும்மா இருப்பவனும்; சும்மாவே இருந்துவிட்டு வேலை செய்பவனும்.

  1. மனிதனின் மிகப்பெரிய நம்பிக்கை எது?

‘தந்தை’ எனும் உறவு.

  1. உலகிலேயே வெளிப்படையான நண்பர்கள் யார்?

புத்தகங்கள். அவைகள் அவற்றுக்கு தெரிந்த எதையும் நம்மிடம் மறைப்பதில்லை.

  1. ‘உண்மையான அறிவாளி’ என்பவன் யார்?

தான் எந்த அளவிற்கு முட்டாள் என உணர்ந்தவன்.

  1. கடவுள் கண் முன் தோன்றினால் என்ன வரம் கேட்கலாம்?

“நிம்மதி”யைக் கேளுங்கள்.

ஒன்று,எல்லாம் வந்தால் மட்டுமே,நிம்மதி வரும்;

இல்லையென்றால்,நிம்மதி வந்தால் எல்லாமே வரும். (எப்படியும் நமக்கு லாபம்தான்..!)

  1. ‘கடவுள்’ என்று ஒருவர் இல்லையென்றால்?

இப்படி ஒரு கேள்வி வந்திருக்காது.

  1. மிக பதட்டமான சூழ்நிலை எப்போது வரும்?

அது பருவத்தை பொறுத்தது.

(உதாரணமாக, மாணவர்களுக்கு தேர்வறையில்;

மணமகனுக்கு மணவறையில்; காதலர்களுக்கு வீட்டில் தெரியப்படுத்தும் போது; வேலை தேடுபவனுக்கு நேர்முகத் தேர்வில்,…இது போல் இன்னும் பல..!)

  1. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் எதைக் குறிக்கிறது?

அதற்கு முன் அவ்விடத்தை ஆக்கிரமித்திருந்த பழைய கண்டுபிடிப்பின் அழிவை.

  1. ஏமாற்றங்களை எவ்வாறு தவிர்க்கலாம்?

எதிர்பார்ப்புகள் இருக்கும்வரை ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.

10.  உண்மையான அன்பையும் நட்பையும் எப்போது உணரலாம்?

உலகமே உன்னை தூற்றினாலும், உன் பின்னால் நின்று உன்னை தேற்றும்போதும், உன் முன்னால் நின்று உன்னை காக்கும்போதும்.

Share This Post