கேள்வியும் நானே பதிலும் நானே – 3

கேள்வியும் நானே பதிலும் நானே – 3

 1. ஒருவனது முன்னேற்றத்தை முடக்கும் விஷயங்கள் என்னென்ன?
 • மறக்க இயலாத, வலி மிகுந்த கடந்த காலம்
 • திட்டமிடப்படாத நிகழ்காலம்
 • கேள்விகள் சூழ்ந்த, பயம் மிகுந்த எதிர்காலம்.
 1. காதலில் விரிசல் விழுவது எப்போது?

காதலனின் மொபைல் போன் பாஸ்வேர்ட் காதலிக்கும், காதலியின் மொபைல் போன் பாஸ்வேர்ட் காதலனுக்கும் கிடைக்கும்போது.

 1. இவ்வுலகில் எதையும் செய்யத் துணிந்தவன் யார்?

தன்னிடம் இழப்பதற்கு ஏதும் இல்லாதவன்.

 1. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள என்ன செய்யலாம்?

சுயமரியாதையை முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 1. ‘பிரச்சனை வேண்டாம்’ என ஒதுங்கி செல்பவர்களை, கோழைகள் என்று சொல்பவர்களைப் பற்றி?

‘எரிமலை வெடிக்கும் வரை அமைதியாகத் தான் இருக்கும்’ என்பதை அறியாத மூடர்கள்.அவர்கள்.

 1. நம்மை புறக்கணிப்பவர்களை நாம் என்ன செய்வது?

பதிலுக்கு நாமும் அவர்களைப் புறக்கணிப்பதே சிறந்த வழி.

 1. எப்போது அடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்?

நமக்கு அதிகாரம் அதிகமாகும்போது.

 1. மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகும்போது என்ன செய்யலாம்?

பிரியமானவர்களிடம் சொல்லி புலம்பி அவர்கள் மனநிம்மதியையும் கெடுக்கலாம்..

 1. ‘மதம்’ என்பது?

வெளியில் தேவை இல்லை என்று பேசிவிட்டு உள்ளுக்குள் தீவிரமாக கடைபிடிப்பது.

10.நமக்கு தீங்கு செய்தவருக்கு, நாம் நன்மை செய்தால்?

இக்காலத்தில், ஊரும், அந்த தீங்கு செய்தவரும் உங்களை ‘இளிச்ச வாயன்’ என்று சொல்லும்.

Share This Post