சங்ககாலம் முதலே நானோ தொழில்நுட்பம்

சங்ககாலம் முதலே நானோ தொழில்நுட்பம்

Tamizhan – The pioneer in Nano technology:

நானோ டெக்னாலஜி என்பது இப்போது பொறியியல் கல்வியில் மிகவும் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அதைப் பற்றிபேசாத கல்லூரி மாணவர்கள் இல்லை. ஏனெனில் விவசாயம், மருத்துவம் உட்பட எல்லாத்துறைகளிலும் நானோவின் பங்கு மகத்தானது.

இது ஏதோ அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று எண்ணவேண்டாம். நம்முடைய தமிழ்நாட்டில் சங்ககாலத்திலிருந்தே நம்முடைய பயன்பாட்டில் இருந்த ஒன்றுதான் இந்த நானோ என்றால் காதில பூச்சுத்தாதீங்க என்று கூறும் அயல்நாட்டினர் மட்டும் அல்ல நம்முடைய தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு சின்ன தகவல் கொடுத்திருக்கிறோம், படித்துவிட்டு காலரை தூக்கிவிட்டுகொள்ளுங்கள்.

தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட அளவுகளில் விரல் அளவுமுறையும் ஒன்று. ஒரு விரல் = 8நெல்மணி (தற்போதைய 1 inch). அதுக்குள்ளே புருவம் உயர்கிறதா? மேலும் படிங்க, நம்முடைய தமிழர்கள் நானோ அளவுகளுக்கு அப்பவே பெயர் எல்லாம் வச்சுருக்காங்க, அதுல ஒரு சின்ன பட்டியல் பார்ப்போமா?

1 சிறிய கடுகு = 8 நுண்மணல்,

1 நுண்மணல் = 8 மயிர்நுனி,

1 மயிர்நுனி   = 8 துசும்பு,

1 துசும்பு       = 8 கதிர் துகள்,

1 கதிர் துகள்   = 8 அணு,

1 அணு       = 10நுண் அணு,

1 நுண் அணு = 10 கோன்.

இன்னும் நிறைய தகவல்கள் நானோ தொழில்நுட்பத்தில் தமிழர்களின் ஆளுமையைப்பற்றி சொல்லலாம், ஆனால் தமிழர்களுக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காது, சாதிப்பான் ஆனால் சத்தமில்லாமல் இருப்பான் அதான் தமிழன்!

Share This Post