சரவெடி ஸ்பெஷல் – 1

சரவெடி ஸ்பெஷல் – 1

நம்ம வெற்றுப்பக்கம் facebook-ல நம்ம படிச்சதுல பிடிச்ச சில விறு விறு சுறு சுறு விஷயங்கள நிறைய பேரு படிக்க தவறிட்டாங்க. அவங்க கேட்டுக்கிட்டதால இதோ அவைகளை ஒருங்கிணைத்து உங்களுக்காக……

 

ஒரு துரியோதனனை சமாளிக்க நீங்கள் துரியோதனனாக மாறவேண்டும் என்று அவசியம் இல்லை, ஒரு அர்ச்சுனனாக இருந்தால் போதும்.
by டி.டி.ரங்கராஜன்

 

உங்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்கிறது, ஆனால் யாருமே உங்களை எந்த கேள்வியும் கேட்பதில்லை என்ற நிலைமை வரும்போது நீங்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம் – ஆலன் & பார்பரா…

 

ஒரு சுண்டெலி பூனையை பார்த்து சிரிக்கிறது என்றால், அந்த சுண்டெலிக்குப் பக்கத்தில் அதன் பொந்து இருக்கிறது என்று பொருள்.

 

என்னுடையது என்று நீங்கள் எதையெல்லாம் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களோ, அதையெல்லாம் வரிசையாக எழுதுங்கள். அந்த பட்டியல் எவ்வளவு நீளம் வருகிறதோ அதுவே கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரமாகும் – சுவாமி சின்மயானந்தர்

 

என்னதான் நீரைவிட நெருப்பு பார்க்க ரொம்ப வலிமையானது மாதிரி தெரிஞ்சாலும், இரண்டும் மோதும்போது தோல்வியடையிறது என்னமோ நெருப்புதான்.
நண்பேன்டா…

உலகத்தில் சிறந்த நண்பர்கள் கூட ஒருவருக்கொருவர் மற்றவர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது…

 

என்னதான் உங்க வீட்டு நாயா இருந்தாலும் அது முன்னாடி நீங்க சாப்பிட்டா உங்க அனுமதி இல்லாம உங்க தட்டில வாய் வைக்காது, ஆனால் தள்ளி உட்கார்ந்து உங்க சாப்பாட்டையே பார்த்துக்கிட்டுத்தான் இருக்கும்.

 

ஆதாமும் ஏவாளும் சிறந்த காதல் ஜோடின்னு ஒத்துக்கொள்ள முடியாது…ஏனெனில் அவங்க ரெண்டு பேருக்கும் வேற option இல்லை….

 

தம்பி டீ இன்னும் வரல….
டீ கடையில் மணி மானேஜ்மென்ட்(Money Management) பற்றி என் நண்பன் அரை மணி நேரம் எனக்கு அறிவுரை அள்ளி வழங்கினான், ஆனால் கடைசியில் 2 டீக்கும் காசு குடுத்தது என்னவோ நான் தான்…

 

நாய் பொழப்புடா….
எதோ ஒன்றை எடுப்பதர்காக ஒரு அறையில் நுழைந்துவிட்டு என்ன எடுக்க வந்தோம்னு மறந்து போய் 5 நொடி அங்கேயே நின்றுவிட்டு தெரியாமல் திரும்பி வந்துருப்போம், எல்லாரும் இந்த அனுபவத்தை வாழ்க்கையில் எப்பொழுதாவது சந்தித்து இருப்போம். அனால் ஒரு நாயின் மொத்த வாழ்க்கையும் இப்படி தான் போகுது…..

Share This Post