சரவெடி ஸ்பெஷல் – 2

சரவெடி ஸ்பெஷல் – 2

நம்ம வெற்றுப்பக்கம் facebook-ல நம்ம படிச்சதுல பிடிச்ச சில விறு விறு சுறு சுறு விஷயங்கள நிறைய பேரு படிக்க தவறிட்டாங்க. அவங்க கேட்டுக்கிட்டதால இதோ அவைகளை ஒருங்கிணைத்து உங்களுக்காக……

கடவுள் எப்போது சிரிப்பார்?
அவரிடம் சொல்லுங்கள் என்னுடைய எதிர்காலத்தைப்பற்றி நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று…

என்னப்பா நியாயம்?
நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்குத் தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன், இதை நான் சொன்னால் பிடிவாதம் பிடிச்சவன்னு சொல்லுவீங்க?! ஆனால் இதை சொன்னது மாவீரன் அலெக்சாண்டர்னு சொன்னா சத்தமில்லாம ஏற்றுகொள்வீர்கள்?! இது என்னப்பா நியாயம்?

காரணத்துக்கு காரணம்…..
காந்தியை சுட்டவனும் காரணம் சொல்றான், காரம் சட்னில ஏன் இல்லைன்னு கேட்டா கட்டினவளும் காரணம் சொல்றா, கவர்ன்மென்ட் ஜாப்ல இருந்துட்டு கடன் கேக்குறவனும் காரணம் சொல்றான், காரணம் இல்லாமல் எதுவும் கிடையாதானா அதுக்கும் காரணம் சொல்றான்….

யோசிங்க…
ஆள் இல்லாத ரோட்ல பைக்குள போறவன் ஹோர்ன் அடிச்சிகிட்டே போன அவன லூசு பையனு ஏன் நினைக்கணும்? எதோ ஒரு டியூன் ட்ரை பண்றான் அல்லது ஹோர்ன் நல்லா அடிக்குதானு செக் பண்றானு ஏன் நாம் நினைக்க கூடாது…..

யோசிங்க…
நீயா நானாவில் கலந்துக்கிரவங்க ரொம்ப வெளிப்படையாக பேசுறாங்கனு ஏன் நினைக்கணும்?
மொத்த குடும்ப மானத்தையும் கப்பலேத்தராங்க ஏன் யோசிக்கக்கூடாது?

யோசிங்க…
குடிநீர்ல மீன் குஞ்சுகள் வருதுன்னு ஏன் போராட்டம் பண்ணணும்? மீன் விக்கிற விலைல அந்த தண்ணில கொஞ்சம் மசாலா போட்டு மீன் குழம்பு வச்சிர வேண்டியது தானே?

நூறு வயது வரை வாழவேண்டுமா…?
முல்லா நூறாவது பிறந்தநாள் கொண்டாடும்போது எப்படி இப்படி ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் நான் மது அருந்த மாட்டேன், பெண்கள் சகவாசம் இல்லை என்றார். அப்போது அடுத்த ரூமில் எதோ டாமல்னு சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று அவர்கள் கேட்டனர் அதற்கு முல்லா என்னோட அப்பா தான் குடிச்சிட்டு வேலைக்காரியை தொரத்திகிட்டு இருக்கார்னு சொன்னாராம்….

யோசிங்க…
வீட்ல எப்படித்தான் புளியோதரை பண்ணாலும் கோவில்ல பிரசாதமா கிடைக்கிற புளியோதரை ரொம்ப டேஸ்ட்டா இருக்குது. பூஜையில் வைக்கிற பத்தியும் பிணத்துக்கு அருகில் வைக்கிற பத்தியும் ஒரே பிராண்ட்டா இருந்தாலும் வேற வேற வாசனை வருதே எப்படி? யோசிங்க…

யோசிங்க…
நான் ஒன்னு சொன்ன தப்பா நினைச்சுக்க மாட்டிங்களான்னு யாராவது சொன்னா அவங்க என்ன சொல்லப்போறங்க?

 

Share This Post