சாப்பிடும் சாப்பாடு உடம்பில் ஒட்டவேண்டுமா?

சாப்பிடும் சாப்பாடு உடம்பில் ஒட்டவேண்டுமா?

சாப்பிடுகிற சாப்பாடு உடம்பில் ஒட்டமாட்டேங்குது என்று பலரும் புலம்புகின்றனர். தமிழர் பழக்கவழக்கங்களில் சாப்பிடும் முறை பற்றி வேதகாலத்தில் இருந்தே நிறைய நூல்களில் நம்முடைய முன்னோர்கள் குறிப்புகள் கொடுத்துள்ளனர்.

நாம் பின்பற்றுவதற்கு எளிய வழிகள் தான் இவைகள். எனவே முயற்சி செய்து பார்க்கலாம். நம்முடைய முன்னோர்கள் காரணமில்லாமல் இப்படி சொல்லி இருக்கமாட்டார்கள்.

இதனை கொஞ்சம் பின்பற்றி பாருங்கள். பிறகு நாம் சாப்பிடும் சாப்பாடு நமக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

 • பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே உணவு உண்ணவேண்டும்.
 • கை, கால்கள், வாய் ஆகியவற்றை சுத்தம் செய்தபின் உண்ணவேண்டும்.
 • ஒரு ஆடை மட்டும் அணிந்து உண்ணக்கூடாது.
 • சாப்பிட அமரும் இடம் மேடு பள்ளமில்லாமல் இருக்கவேண்டும்.
 • விடியற்காலம், சாயுங்காலம், நடுஇரவு சமயங்களில் உண்ணக்கூடாது.
 • வாயினால் சாப்பாட்டை ஊதி உண்ணக்கூடாது.
 • கிழக்கு அல்லது மேற்கு நோக்கி உண்ணலாம்.
 • உணவு உண்ணும்பொழுது பேசக்கூடாது.
 • இனிப்பு வகைகளை உண்ணும்போது நன்கு சுவைத்து கூழ்மமாக விழுங்கவேண்டும். ஏனெனில் நாக்கில்தான் இனிப்பை செரிப்பதற்கான சுரப்பிகள் உள்ளன.
 • மொத்தம் முப்பத்தி இரண்டு கவளங்கள் மட்டும் சாப்பிட்டால் நீண்ட ஆயுள் பெறலாம்.
 • தலையில் ஆடையை கட்டிக்கொண்டும், இடது காலின் மேல் கையை வைத்துக்கொண்டும் சாப்பிடகூடாது.
 • இலை, வெண்கலபாத்திரம், வெள்ளித்தட்டு போன்றவற்றில் உண்ணலாம்.
 • காலில் செருப்பு அணிந்து கொண்டும், பஞ்சணையின் மீது உக்கார்ந்து கொண்டும், சாப்பிடகூடாது.
 • நாய் போன்ற விலங்குகளை பார்த்துக்கொண்டும் உண்ணக்கூடாது.
 • ‘உணவைக் குடி, நீரை உண்’ என்ற மேற்கொளுக்கிணங்க உணவை நன்றாக மென்று உண்ணவேண்டும், நீரை சிறிது சிறிதாக குடிக்கவேண்டும்.
 • தட்டை கையில் வைத்துக்கொண்டும், மடியில் வைத்துக்கொண்டும் சாப்பிடகூடாது.
 • சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது இடையில் எழுந்து எச்சில் கையுடன் எங்கும் செல்லக்கூடாது.
 • சிந்திய உணவை பொறுக்கி உண்ணக்கூடாது.
 • கட்டிலில் உக்கார்ந்துகொண்டும், கால் நீட்டி உக்கார்ந்துகொண்டும் சாப்பிடகூடாது.
 • சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின்பும் தண்ணீர் குடிக்கவேண்டும்.
 • உடைந்த பாத்திரத்திலும், இருட்டிலும், காட்டிலும், ஆலயத்திலும் உண்ணக்கூடாது.
 • நெய், எண்ணெய், உப்பு, நீர், பாயாசம் இவைகளை கை படாமல் கரண்டியால் பரிமாற வேண்டும்.
 • பசு, எருமை, ஆடு இவைகளைத்தவிர மற்ற விலங்குகளின் பாலை குடித்தால் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.
 • இரவில் தயிர், பாகற்காய், கீரை வகைகள், இஞ்சி போன்றவற்றை சாப்பிடகூடாது.

Share This Post