சிலையும் நானே சிற்பியும் நானே -1

சிலையும் நானே சிற்பியும் நானே -1

சிலையும் நானே சிற்பியும் நானே –  இந்த பகுதியில் சமுகம், ஆன்மிகம், உளவியல், சினிமா, விளையாட்டு, அரசியல் போன்ற பல்வேறுபட்ட துறைகளில் இருந்து கேள்விகளும் பதில்களும் இடம் பெறும்.

*ஞானம், அறிவு இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

To get knowledge add something everyday, to get wisdom leave something everyday.

*எந்த வயசுல கல்யாணம் பண்ணலாம்?

நீங்க ஆணாக இருந்தால் ‘வாழ்ந்தது’ போதும் என்ற நினைப்பு வரும்போதும்,  பெண்ணாக இருந்தால் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற நினைப்பு ஆரம்பமாகும்போதும்..

*பார்க்காமல் காதலிப்பவர்களைப் பற்றி?

ஒருத்தரோட மனசு மட்டும் பிடிச்சிருந்தா அது நட்பு,

ஒருத்தரோட உடம்பு மட்டும் பிடிச்சிருந்தா அது காமம்,

ஒருத்தரோட மனசும் உடம்பும் பிடிசிருந்தாதான் காதல்.

*உடல் எடையை கஷ்டபடாம எப்படி குறைக்க?

வெரி சிம்பிள், உங்க தலையை வலதும், இடமுமாக அசைத்தால் மட்டும் போதும், எப்பொழுது என்பதுதான் முக்கியம்.. உணவு பரிமாறும்போது இன்னும் வேண்டுமா என்று கேக்கும்போது!

*கண்டிப்பா எதையும் திட்டம் போட்டுத்தான் செய்யணுமா?

If you fail to plan, you plan to fail.

*என்னோட கேரக்டரை பற்றி நான் எப்படி தெரிஞ்சுக்கிறது?

நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறீங்களோ அது நீங்கள் இல்லை, உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுவும் நீங்கள் இல்லை, மற்றவர்கள் நம்மைப்பற்றி இப்படி நினைக்கிறார்களோ என்று எதை நினைக்கிறீர்களோ அதுதான் நீங்கள்.

*எதுலயும் ஈடுபாடு இல்லாமல் சும்மா இருப்பது தப்பா?

நிலத்துல எதையும் போடாமல் இருந்தால் தேவையில்லாத களைகள் வளர்ந்துவிடும். பிறகு நீங்கள் எதையாவது பயிர் செய்யணும்னு நினைத்தால் களைகளை அகற்றவேண்டும். பிறகு டபுள் டூட்டி பார்க்கணும்,

*என்னைப்பற்றி குறைசொல்பவர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது?

Better living is the best revenge.

*கடவுள் இருக்கிறாரா?

கடவுள், காதல், பேய் பற்றி புத்திசாலிகள் விவாதம் செய்வதில்லை ஏனென்றால் இவைகள் நம்புகிற விஷயம் இல்லை, உணருகின்ற விஷயம்.

*இந்த பூமியில் எதற்காக மனிதர்கள் காலம் காலமாக வந்து போகிறார்கள்?

இனப்பெருக்கம் செய்வதற்கு, இல்லையெனில் இனப்பெருக்கம் நடைபெறுவதற்கு வசதியான சூழ்நிலை அமைத்துக் கொடுப்பதற்கு.

 

இது தனிப்பட்ட ஒருவரின் கேள்விகளோ பதில்களோ கிடையாது. இது போல் கேள்விகள் மற்றும் பதில்கள் இருந்தால் வரவேற்கப்படுகின்றன.

 

Share This Post