சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-பின்குறிப்பு

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-பின்குறிப்பு

பின்குறிப்பு: (சூன்யத்தைத் தேடி…..)

எங்களுடன் இணைந்து கடந்த பத்து பாகங்களாக சூனியத்தைத் தேடி பயணம் செய்த அனைவருக்கும் மிகவும் நன்றி. பயணத்திற்கிடையில் பாதியிலேயே இறங்கியவர்களுக்கும் மிக மிக நன்றி. இந்த வேகமான உலகத்தில் நாவல்கள் படிக்க நேரமில்லாமல் ஒரு நிமிட கதைகளில் நாம் பிரயாணிக்கிறோம். ஐந்து நாள் டெஸ்ட் மேட்ச் இருபதுக்கு இருபது என்று சுருங்கிவிட்டது. உங்களில் சிலர், (சூன்யத்தை தேடி மூலம்) இப்போது நீங்க என்ன சொல்ல வறீங்க என்று முழுமையாக இந்த தொடரைப் படிக்காமல் நிறைவுப் பகுதியை நேரடியாக படித்து இருப்பீர்கள். அதனால்தான் அங்கும் அவர்களுக்கு நாங்கள் என்ன சொல்லவந்தோம் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டோம்.

இது கதை அல்ல ஒரு முடிவு சொல்வதற்கு, கட்டுரை அல்ல கருத்து சொல்வதற்கு, இது ஒரு தேடல், நாம் தேடுவது என்னைக்குத்தான் தேடியவுடன் கிடைத்திருக்கிறது? ஆனால் நாம் தேடியது சிக்காமல் வேறு சில பொருள்கள் நமக்கு சில சமயங்களில் கிடைத்திருக்கும், அதுபோல உங்களில் சிலருக்கு சில விஷயங்கள் கிடைத்திருக்கலாம், சில நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கலாம். அப்படி உங்களிடம் கேள்விகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்கள் அவைகளுக்கு எங்களால் முடிந்த பதில்களைத தருவதற்கு தயாராக இல்லை(!?). நமக்குத் தெரியும் எப்போதும், மாணவப் பருவத்திலிருந்தே நம்முடைய கேள்விகளை நாம் மனதிற்குள் மண்ணை மூடி புதைத்து வைத்துவிடுவோம்.

எனவே கேள்விகளை விட்டுவிடுவோம், ஏதாவது விமர்சனம் இருந்தால் தைரியமாக விமரிசிக்கலாம். (ஆட்டோவில் ஆள் எல்லாம் அனுப்பமாட்டோம்!) ஒன்று இரண்டு வார்த்தை பாராட்டு? அதையும் மனதிற்குள் செய்துகொள்ளுங்கள். வேறு என்ன வேண்டும் என்கிறீர்களா? இந்த தொடரை நீங்கள் முழுமையாக வாசித்து இருக்குறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு வழி மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் , அது எங்களுடைய அடுத்த தொடருக்கு அஸ்த்திவாரமாக இருக்கட்டும், மிக்க நன்றி (இது பின் குறிப்பு படித்ததுக்கு).

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-10

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-9

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-8

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-7

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-6

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-5

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-4

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

Share This Post