சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

பாகம் 3 : (சூன்யத்தைத் தேடி…..)

     ரயில் ஒரு நிறுத்தத்திற்கு வந்தவுடன் எதோ வயிற்றில் கிள்ளியது, அதற்கு பசி என்று யார் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஏதாவது சாப்பிடலாமா என்று சத்யனிடம் கேட்டேன், “பரவாயில்லை பாஸ் இப்பயாச்சும் உங்களுக்கு சுயநினைவு வந்ததே” என்று ரயில் நிலையத்தில் எனக்குப் பிடித்த பூரிப்பான தட்டும் அதான் பூரியும், அவனுக்கு தோசையும் வாங்கிவந்தான். கடவுளிடம் எதாவது வேண்டுமா என்று கேட்டேன் “நான் வாழைப்பழமும் தீர்த்தமும் கொண்டுவந்திருக்கிறேன், அது போதும்” என்றார். தீர்த்தம்னு எத சொல்றாருன்னு தெரியல.

எதிர் இருக்கை யுவதி செல்லிடை பேசியில் மின்சக்தி அதான் சார்ஜ் குறைந்துவிட்டதால் அணைத்துவிட்டு(செல்லிடை பேசியைத்தான்) எங்களை அளவெடுக்க ஆரம்பித்தாள். அவள் கவனிக்கிறாள் என்றவுடன் சத்யன் “எப்படி சொல்றீங்க நம்ம ரீபுரடக்சஷனுக்கு உதவுறோம்னு” என்று சாப்பிட்டுகொண்டே கேட்டான்.

கடவுள் “மனிதர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் தாங்கள் செய்கின்ற தொழில்களால் இனப்பெருக்கத்திற்கு உதவுகிறார்கள். ஒரு தீவில் தனியாக இருப்பவனுக்கு சீப்பு தேவையில்லை, ஏன்னு தெரியுமா?” என்றார்.

“நம்மை யாரு பார்க்கப்போறா?, எதுக்கு சீவனும்? என்ற காரணமாய் இருக்கும்” என்று எதிர் இருக்கை யுவதியை பார்த்துக்கொண்டே சொன்னான் சத்யன். “முழுக்க சரி” என்றார் கடவுள். “எதுக்கு பார்க்கனும்? எதுக்கு ஈர்க்கனும்?”

“ஒரு திருமணம் நடக்கிறது அதற்கு ஜோசியர், அழைப்பிதழ் அச்சிடுபவர், திருமண மண்டபம் கட்டியவர், உள் அலங்காரம், சமையல் கலைஞர்கள், வண்ண விளக்குகள், ஒலிபெருக்கி அமைப்பாளர், உடை மற்றும் பியுட்டிசியன் இன்னும் நிறைய சொல்லலாம், இவர்கள் அனைவரின் வேலையும் எதற்கு? ஒரு இனப்பெருக்கம் ஆரம்பிப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார்கள், இல்லையா?” என்று தம் கட்டி பேசினார்.

“அப்படி பார்த்தா திருமணத்தோட காரணமே அதான், அதை மட்டும்வைத்து சொல்லக்கூடாது”, என்றேன். எதிர் இருக்கை யுவதி எங்கள் உரையாடலில் ஈர்க்கப்பட்டாள் என்பது அவளது கண்களில் தெரிந்தது.

“கலை, இலக்கியம், தொழில்நுட்பம் இது எல்லாமே எதை மையப்படுத்தி செயல்படுகிறது? செல்லிடை பேசியே எடுத்துகோங்க தகவல் பரிமாறிக்கிறதவிட கடலை போடுறதுக்குதான் அதிகமா உபயோகமாகுது. நம்ம போடுற செப்பல் ஷூல இருந்து தலைக்குத் தேய்க்கிற எண்ணை வரைக்கும் வடிவத்துலையோ, நிறத்துலையோ, மணத்துலையோ எதிர் பாலினத்தை கவருவதாகவே இருக்குது”.

“ஒரு நாளைக்கு சுமார் அருபதாயிரம் எண்ணங்கள் நம்ம மூளைக்கு வருது அதுல பெரும்பாலும் எதிர்பாலினத்தை எப்படி தக்கவைத்துக்கொள்வது, எப்படி கவருவது, அதுக்கு வேண்டிய பணம், பதவி இதைப் பற்றியே தான் இருக்குது”.

“கனவையே எடுத்துகோங்க சிக்மண்ட் பிராய்டு சொன்னாப்புல தம்மடிக்கிறாப்புல கனவு வந்தாக்கூட….,” என்று எதிர் இருக்கை யுவதியைப் பார்த்தவாரு இழுத்தார், “தெரியும் அங்கிள் நானும் ட்ரீம்ஸ் ஒப் இண்டர்ப்ரடேசன் படிச்சுருக்கேன்” என்றாள்.

அதுக்கு என்ன அர்த்தம் பாஸ் என்று கேட்ட சத்யனிடம் “அது தெரிஞ்சா இனிமேல் நீ தம்மடிக்கமாட்ட, நீங்க சொல்லுங்க சார்” என்றேன்.

“அதுக்கு அர்த்தத்தையா?” என்றவரிடம், “ஐயோ சார் நம்ம மேட்டருக்கு வாங்க” என்றேன்.

“இந்த பிரபஞ்சத்தையே எடுத்துக்கோங்க, இனப்பெருக்கத்துக்கு எப்படி சப்போர்ட்டா இருக்குனு ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்றேன், ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது யாராவது தொந்தரவு செய்றாங்களா அதாவது அந்த நேரத்துல அவசர வேலையாகவோ அல்லது தற்செயலாகவோ கதவ தட்டுறதோ, மொபைல் மணியடிக்கிறதோ, குழந்தை முழிச்சுகிறதோ மேக்சிமம் இருக்காது, இன்னும் சொல்லப்போனா அந்த நேரத்துக்கு முன்னாலையோ அல்லது பின்னாலயோதான் குறுக்கீடு இருக்கும் ஒரு அவசர விஷயம்னா கூட” என்றார்.

“பெரும்பாலும் இரவில அது நடக்குறதால குறுக்கீடு இருக்காது சார்” என்றேன், இப்ப யாரும் நேரம் காலம்லாம் பார்க்கிறதில்லை பகல்ல நடந்தாகூட குறுக்கீடு மேக்சிமம் இருக்காது யோசிச்சு பாருங்க ஒரு பத்து வருடம் குடும்பம் நடத்துன தம்பதிட்ட கேளுங்கள் அவங்க பத்துவருட தாம்பத்ய உறவின்போது எத்தன தடவ குறுக்கீடு வந்ததுன்னு? அப்ப தெரியும் நான் சொல்றது எவ்வளவு உண்மைன்னு” என்றார்.

“நம்ம வளக்குற நாய்க்குட்டில இருந்து நகதுக்குப் போடுற நகப்பூச்சு வரைக்கும் நம்ம சந்தோசப்படுத்துறதுதான் வேலையே. நம்ம சந்தோசமா இருந்தாதான் ரிலாக்ஸா இருக்க முடியும் அப்பதான் அதுல ஈடுபட முடியும்,” என்றார்.

“என்னைய மாதிரி பிரம்மசாரி, சாமியார்கள் எல்லாம் எதுக்கு இங்க” என்றேன். சாமியார்கள் எல்லாம் எப்படி துறவறம் போறதுன்னு சொல்றாங்களா? இல்லையே, எப்படி இல்லறம் நடத்துவது என்றுதான அறிவுறுத்துறாங்க, சில சாமியாருங்க இன்னும் ஒரு படி மேல போயி செஞ்சே காட்டுறாங்க. பிரம்மசாரிகள் சம்சாரிகளுக்கு எவ்ளோ உதவியா இருக்காங்க? உனக்கென்ன குடும்பமா குட்டியானு அவங்க சொத்துல இருந்து எல்லாத்தையும் யாரு எடுத்துகிறா இன்னொரு பிரம்மசாரியா? இல்லையே ஒரு குடும்பஸ்தன்தான் எனவே

உரத்துல இருந்து மரம் வரை

           வெங்காயத்துல இருந்து பெருங்காயம் வரை

           கனில இருந்து மணி வரை

           ஜீன்சுல இருந்து பீன்சு வரை

           பயிர்ல இருந்து …யிரு வரை

          சாமியாரிலிருந்து மாமியார் வரை …..  எல்லாமே இனப்பெருக்கத்திற்கு ஆதரவாத்தான் இருக்கு” என்று ஆணித்தரமாகச் சொன்னார்.

தலை சுத்தியது எனக்கு அப்படினா கடவுள்னு ஒருத்தர் இருக்காருல, (இருக்காறா?) அவரு வேலை என்ன என்று கடவுளிடமே கேட்டேன், மந்தகாசமாக சிரித்தபடி ஆரம்பித்தார்… (நம்ம இங்க நிப்பாட்டுவோம்…)

தேடுவது தொடரும்….

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

 

Share This Post