சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-5

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-5

பாகம் 5: (சூன்யத்தைத் தேடி…..)

சில சமயங்களில் நாம் யாருடன் இருக்கிறோம் யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பதையே மறக்கும் அளவுக்கு அவர்களுடைய பேச்சு நம்மை மெய் மறக்கச்செய்கிறது.

“சார், கடவுள் பற்றி பேசினால் பேயைப் பற்றி நம்மால் பேசாமல் இருக்கமுடியாது. காந்தி என்றால் கோட்சேயை நம்மால் குறிப்பிடாமல் இருக்கமுடியாது” என்றாள் அனாமிகா.

“ஆமா படையப்பாக்கு பேரு வாங்கிக் கொடுத்ததே நீலாம்பரிதான”, என்றான் சத்யன்.

“நல்ல சக்தின்னு ஒன்னு இருந்தா மக்கள் நினைக்கிற மாதிரி தீய சக்தினு ஒன்னு இருக்கத்தான செய்யும் அத பற்றி சொல்லுங்க”, என்றேன்.

“எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்”, என்று ஆரம்பித்த கடவுள் “மனிதன் உயிரோட இருக்கும்போது எதை நாம உயிருனு சொல்றோம்?” என்று கேட்டார்.

“மூச்சு நின்றுச்சுன்னா புட்டுகிட்டாருனு அர்த்தம் அப்படின்னா நாம உள்வாங்குற காற்றுதான உயிரு”, என்றான் சத்யன்.

“ஆத்மாதான் உயிரு சார் அதுதான நம்ம இயக்குது அது வெறும் காற்று இல்லை அது உணர்வு கலந்தது”, என்றாள் அனாமிகா.

கடவுள் என்னைப் பார்த்தவுடன் ரஜினி மாதிரி தாடையைத் தடவிக்கொண்டே எதையோ யோசித்து சொல்வதுபோல் பில்டப் பண்ணிட்டு இப்ப பல பேருக்கு மண்டைல இருக்கிற …யிருதான் உயிரு என்று சொல்லத் தோனுச்சு, ஆனா “நீங்களே சொல்லுங்க சார்”, என்றேன்.

“அது காற்றோ, ஆத்மாவோ, பிரபஞ்ச சக்தில ஒரு பிட்டோ, எதுவா இருந்தாலும் உடலில் இருக்கும்வரை உயிரு, வெளிய போய்ட்டா அதான் நீங்க சொல்ற பேய்”, என்றார்.

“அந்த தீய சக்தி நம்மை என்ன செய்யும்? எதுக்காக நாம் அதை கண்டு பயப்படுகிறோம்?”, என்றாள் அனாமிகா.

“நாங்கல்லாம் பேய்கூடவே ஒண்ணா பாயில படுக்கிறவிங்க என்று அனாமிகாவிடம் தன்னுடைய ஹீரோத்தனத்தை எடுத்துவிட்டான் சத்யன். நல்ல காமடி கேட்டது போல சிரித்தாள் அனாமிகா. அதையும் கிரடிட்டா எடுத்துகிட்டான் நம்மாளு.

“முதல்ல பேய்க்கு நம்ம என்ன கெட்டப் கொடுத்திருக்கோம்னு பார்ப்போம்,

‘வெள்ளை சேலை (அதுவும் ட்ரான்ஸ்பரண்டா), லூஸ் ஹேர், கொலுசு, மல்லிகைப்பூ!

சூழ்நிலை என்ன கொடுத்திருக்கிறோம்னா

‘இரவு, முடிந்தால் மழை! கன்னியாக இருந்தால் மோஸ்ட் வெல்கம்

  பாடி லாங்குவாஜ்னு பார்த்தா இமைக்காத வெறித்த பார்வை! இதெல்லாம் எதைக் குறிக்கிறது தெரியுமா? எல்லாம் ரொமான்ஸைத் தூண்டி விடுற ஐட்டங்கள்! அதான் சத்யனுக்கு ஒரே பாயில படுக்கிற நினைப்பு வருது என்றார் கடவுள்.

குழந்தை பேய், ஆம்பள பேய் சின்ன பசங்க பேய், இளைஞர்கள் பேய் இதல்லாம் பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை.

“நல்ல ரசனை இருக்கிறவன்தான் பேயை உருவகப் படுத்திருக்கிறான்”, என்றான் சத்யன். “பிறகு எதுக்கு சார் நாம பயப்படுறோம்?” என்றேன் நான்.

“மனிதனுக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கு அவன் கஷ்டப்பட்டு ஒன்றை உருவாக்குவான் பிறகு அதைக்கண்டு அவனே பயப்படுவான், காதல் பண்றவன எடுத்துக்காட்டாய் சொல்லலாம், கஷ்டப்பட்டு காதலை டெவலப் பண்ணுவான் பிறகு காதல் வொர்க் அவுட் ஆனவுடன் காதலை சைனாக்காரன் கண்டுபிடிசிருப்பானோ அதுக்கு கேரண்டியும் இல்ல வாரண்டியும் இல்லன்னு புலம்புவான்”.

“ஆவினு ஒன்னு இருப்பதாவே வச்சுக்குவோம், ஆனா சுஜாத்தா சொன்னமாதிரி அதால ஒரு பேப்பரக்கூட புரட்டமுடியாது. அதுக்கு ஒரு கருவி வேணும் அதாவது ஒரு கை வேணும். இன்னொருத்தர் உடம்புல புகுந்து என்னவேணா செய்யலாமேனு சொல்லுவீங்க, ஏற்கனவே தண்ணீர் இருக்கிற குடத்தில் தண்ணீர் ஊற்ற முடியாது, அதுபோல ஏற்கனவே உயிர் இருக்கிற உடம்பில் இன்னொரு ஆவி புகமுடியாது. அப்பிடியே புகுந்தா ஏற்கனவே இருக்கிற ஆவி எங்க போகும்? இது என்ன பேயிங் கெஸ்டா?”.

“அந்த ஆவி வெளில காத்துல சுத்திக்கிட்டு இருக்கும்போது அது யாரையும் பழிவாங்கவோ தாக்கவோ செய்யாது, ஏன்னா அதுக்கு மூளைவேண்டும், காற்று மாதிரி நம்மை உரசிட்டு போகலாம். அதுக்குமேல அதால ஒன்றும் செய்ய முடியாது, என்றார்.

“எங்க சித்தப்பா பேயை பாத்துருக்கிறாரு, அது பொய்யா?” என்றான் சத்யன்.

“பொய் இல்லை உங்க சித்தப்பா கதை மாதிரி நெறைய கதைகள் உலகமெங்கும் இருக்கு. நீ உங்க சித்தப்பாவ நம்புற அதனால அவரு சொல்றதையும் நம்புற, அவரும் எதையோ பார்த்திருக்காரு, ஆனா அவருக்கே அது சரியா புலப்படாத விஷயமா இருக்கும். இன்னும் சில பேரு அவங்களே கதை திரைக்கதை வசனம் எல்லாம் எழுதி இயக்கி நடிச்சுருவாங்க, சைக்கலஜிக்கலா நம்ம பேச்சை யாருமே கேட்கலன்னு நினைக்கிறவங்க ஜோசியம், பேய், சாமின்னு எப்பவும் பேசி எல்லாரையும் அவங்க பக்கம் திருப்ப முயற்சி செய்வாங்க”.

   “அதெல்லாம் மூடநம்பிக்கையா?” என்றேன் நான். மூடநம்பிக்கையை பற்றி பிறகு பேசலாம் ஆனால் இல்லாதது ஒன்றை பின்பற்றினால் அதான் மூடநம்பிக்கை, ஆவி விஷயத்தில் கடவுள் மாதிரி அது இருக்கா இல்லையானு உறுதியா தெரியாமலேயே அத நம்புறோம், நல்லா சுவாரசியமா இருக்கு ஆவி பற்றி படிப்பதற்கு, கேட்பதற்கு அதனாலதான் ஆவிக்கும் நாம் ஒரு வாழ்க்கை(!) கொடுத்து நம்மோட வச்சுருகோம். அதுவும் நம்ம கூட இருந்துட்டு போகட்டுமே என்றார் கூலாக! கடைசியாக பன்ச் ஒன்னு அவுத்துவிட்டாரு “இப்ப நம்ம பேசிட்டு இருக்கும்போது கூட நம்ம ஒவ்வொரு தோள்பட்டையிலும் ரெண்டு ரெண்டு பேய் காலைத் தொங்கபோட்டு உக்கார்ந்து அதுகளைப் பற்றி என்ன பேசிட்டு இருக்கோமுன்னு கவனிச்சிட்டு இருக்கலாம்….!”, என்றார்.

சற்று திகிலாக ஒவ்வொருத்தரும் ஓரக்கண்ணால் அவரவர் தோள்பட்டையை பார்த்தோம்…..!

சூன்யவேட்டை தொடரும்…

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-4

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

 

 

Share This Post