சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-7

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-7

பாகம் 7: (சூன்யத்தைத் தேடி…..)

“ பசில இட்லிகூட எவ்வளவு தேவாமிருதமா இருக்கு”, என்றேன் தண்ணிய குடிச்சுட்டு நான். “இப்பதான் நிம்மதியா இருக்கு”, என்றாள் அனாமிகா.வாழ்க்கைல சாப்பாடுதான் சார் சந்தோசமே, என்றான் சத்யன்.

ஆகா அடுத்த டாபிக்க பிடிச்சாச்சு, சந்தோசம்னா என்னன்னு கொஞ்சம் கிளறுவோம் என்று நினைத்தபடி கடவுளைப் பார்த்தேன், “எது சார் சந்தோசம்னு கேக்கப்போறிங்க? அப்படித்தான?”, என்றார் கடவுள். நாம் கேட்காமலேயே சிலர் நம்மோட எதிர்பார்ப்பை நிறைவேத்தினா அதுகூட சந்தோசம்தான் என்பது என்னுடைய மூளைக்கு முதல் செய்தியாக வந்தது.

“எனக்கு இப்படி அரட்டை அடிக்கிற சந்தோசம் வேற எதுலயும் கிடைக்கிறதில்லை சார்”, என்றாள் அனாமிகா.

“நீங்க யாருங்கிறதுலையோ, உங்களிடம் என்ன இருக்குங்கிறதுலையோ சந்தோசம் இல்லை, நீங்க என்ன நினைக்கிறீங்க அதை பொறுத்துத்தான் சந்தோசம் இருக்கு, என்றார் கடவுள்.

“அதெப்பிடி சார் நம்மட்ட இப்ப சொந்தமா கார்  இருந்தா சந்தோசப்படமாட்டோமா?” என்றான் சத்யன். கார் வாங்குன அன்று இருக்குற சந்தோசம் அந்த காரை பார்க்கிற ஒவ்வொரு நாளும் இருக்கும்னா அதுதான் சந்தோசமே, கார் வச்சிருக்க எல்லோர்டையும் இந்த கேள்விய கேளுங்க என்றார் கடவுள், கேட்காமலேயே பதில் தெரிந்தது.

“நீங்க யாரு அப்படிங்கிறதுல சந்தோசம் இல்லைனா பெரிய பதவில இருக்குறவங்களோ, செலிபிரைட்டிஸ்னு சொல்றாங்களே அவங்களிடமோ சந்தோசம் இல்லையா?”, என்று அவங்கல்லாம் சந்தோசமாக இல்லைன்னு தெரிந்துகொண்டே கிளறினேன்.

“ அந்த இடத்தை தக்க வச்சுக்க அவங்க படுற பாடு இருக்கே, அவங்களால நம்மள மாதிரிகூட சந்தோசமா இருக்க முடியாது”, என்றார் கடவுள்.

“ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருமாதிரி சந்தோசம் சார், சிலருக்கு மழைல நினையுறது, சிலருக்கு அடுத்தவங்கள கண்ணீருல நனையவைக்கிறது, சிலருக்கு வெற்றி, சிலருக்கு புதுசா ஏதாவது வாங்குறப்போ, சிலருக்கு பாட்டு கேக்கிறது… இப்படி சொல்லிட்டே போகலாம்”, என்றாள் அனாமிகா.

“பாட்டு கேக்கிறப்போனு சொல்லும்போது, எனக்கு என்னோட நண்பன் அமுதன் சொன்னது ஞாபகத்துக்கு வருது சார், ஒரு பாட்டை கேக்கிறப்போ உள்ள சந்தோசத்தைக் காட்டிலும் அதே பாட்டை நம்மளே சத்தமா ஒரு தடவ பாடிப் பார்த்தோம்னா அதான் நமக்கு சந்தோசம்னு சொல்லுவாரு”, என்றேன் நான்.

“அது உங்களுக்கு சந்தோசம், ஆனால் உங்க பக்கத்துல இருக்குறவங்க நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்று கலாய்த்தான் சத்யன்.

“சந்தோசம் வெளியலாம் இல்லை, உள்ளுக்குள்ளே தேடிப் பாருங்க அங்கதான இருக்குனு ஆன்மிகவாதிகள் சொல்றாங்களே சார், வெளில உள்ள சூழ்நிலைகள்தான நம்மோட உள்ளுக்குள் உள்ள மனதை தீர்மானிக்குது அப்படினா அகமும் புறமும் சேர்ந்துதான நம்ம சந்தோசத்தை தீர்மானிக்குது” என்றேன் நான்.

   நீங்க என்ன நினைகிறீங்களோ அதை தைரியமா சொல்றதுக்குரிய சூழ்நிலையும், நீங்க என்ன சொல்கிறீர்களோ அதை செய்வதற்குரிய சூழ்நிலையும் அமைந்தால் அதுதான் சந்தோசம்னு காந்திஜி சொல்கிறார் என்றார் கடவுள்.

“சந்தோசத்துலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோசப்படுத்தி பார்க்குறதுதான் என்கிறார் பாக்யராஜ்”, என்றான் சத்யன்.

“கஷ்டப்படுத்தி பாக்குறதும் சந்தோசம்தான்னு சொல்றாங்க இடி அமின்,  ஹிட்லர் போன்றவங்க என்றாள் அனாமிகா.

உங்களுக்கு அநியாயத்துக்கு ஞாபக சக்தியும், ஒப்பிடும் மனப்பான்மையும் இருந்தால் உங்களால ஒரு நிமிஷம்கூட சந்தோசமா இருக்கமுடியாது என்றார் கடவுள்.

நீங்க சந்தோசமா இருக்கும்போது உங்களால அந்த சந்தோசத்தை அப்போது உணரமுடியாது, பிற்காலத்தில் அதை ஞாபகப்படுத்தி சந்தோசப்படுவீங்கல்ல அதுதான் சந்தோசமே, என்றார்.

“என்னால இப்ப என்னோட முதுகை பார்க்கமுடியுது சார்” என்றேன்.

“தலை சுத்துதாமாம் சார், அதைதான் அப்படி சொல்றாரு எங்க பாஸ்”, என்றான் சத்யன்.

“உங்களோட பள்ளிப்பருவத்தில எப்படா தப்பிச்சு கல்லூரிக்குப் போவோமுன்னு நெனச்சிருப்பீங்க, ஆனால் இப்ப கேட்டா பள்ளிப்பருவத்தை விட சந்தோசமான நாட்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாதுன்னு சொல்லுவீங்க இல்லையா? அப்படின்னா அப்பொழுது சந்தோசமாக இருந்துருக்கீங்க, ஆனால் அப்பொழுது அந்த சந்தோசத்தை உணர முடியவில்லை, அதனால எந்த அனுபவங்கள் அல்லது சம்பவங்கள் எப்போது நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷம் தருகிறதோ அதுதான் உண்மையான சந்தோசமே, இப்ப புரியுதா என்றார் கடவுள்.

“எனக்கு புரியுது சார் இப்போது இந்த பயணம், இந்த கலந்துரையாடல், நம்மோட இந்த சந்திப்பு நமக்கு சந்தோசம் தருது, ஆனால் இப்ப நமக்கு தெரியவில்லை, பின்னாடி ஒருநாள் நாம் ரயிலில் என்னவெல்லாம் பேசினோம், எப்படி இந்த பயணம் இனிமையாக இருந்தது, நல்லா இருந்துச்சுல்லனு நம்ம பீல் பண்ணுவோம் அப்படினா இப்ப நம்ம சந்தோசமா இருக்கிறோம் ஆனால் நம்மால் உணரமுடியவில்லை கரெக்டா சார்?”, என்றாள் அனாமிகா.

“நெத்தியடி!, என்றார் கடவுள். அனாமிகா முகத்தில் சந்தோசக்களை தாண்டவமாடியது.

”அப்படின்னா இப்ப நம்ம சந்தோசம்மா இருக்கோமா சார்? இப்படி ரயிலில் முன்னபின்ன தெரியாதவங்ககூட பேசுறதுதான் சந்தோசமா சார்?”, என்றான் அப்பாவியாக சத்யன்.

நம்ம யார்ட்ட பேசுறோம் என்ன பேசுறோம் எந்த இடத்தில வச்சு பேசுறோம் இதல்லாம் சந்தோஷம் இல்லை, ஆனால் நாம பேசுறோம் இதுவே சந்தோசம்தான் என்றார் கடவுள்.

ஒன்று புரிந்தது எதையுமே நாம அந்த தருணத்தில் உணருவது கிடையாது, சூடா குடிக்கிற டீ யில இருந்து சொகம்மா படுத்து தூங்குற அம்மா மடி வரைக்கும்…..

சூன்ய வேட்டை தொடரும்….

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-6

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-5

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-4

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

 

Share This Post