சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-8

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-8

பாகம் 8: (சூன்யத்தைத் தேடி…..)

சந்தோசத்தைப்பற்றி சந்தோசமாக பேசினோமா என்பது தெரியவில்லை. சத்யனின் கைபேசியிலிருந்து காசு, பணம், துட்டு, மணி, மணினு ரிங் டோன் அடித்தது. யாருடனோ கொடுக்கல் வாங்கல் பற்றி பேசி முடித்துவிட்டு “பணவிஷயத்தில் யாரையும் நம்பமுடியல” என்று அலுத்துக் கொண்டான். “இப்படியே எல்லாரும் சொல்றீங்க, அப்படினா ஒரு காகிதம் நம்ம நடத்தைய முடிவு பண்ணுதா? என்று அடுத்த டாக்கிங்குக்கு அஸ்த்திவாரத்தைப் போட்டேன்.

“காகிதம்னு அசால்ட்டா சொல்றீங்க, அது குப்பைதொட்டிய பார்க்காத காகிதம் தெரியுமா”, என்று வாட்சப்ல படிச்சத அடிச்சுவிட்டாள் அனாமிகா.

கடவுள் ஆரம்பித்தார், “ பணத்தைப் பற்றிய கருத்துகள் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு மூளையிலும் எப்பவும் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் நம்ம குடும்ப உறவுகளை தீர்மானிப்பதே பணம்தான், என்றார்.

“சரியா சொன்னீங்க சார், போன வாரம் என்னோட தங்கச்சி பொண்ணுக்கு மொட்டை போட்டு காது குத்துனாங்க அதுல கொஞ்சம் குறைச்சு தாய் மாமன் முறைக்கு செய்தேனு குடும்பமே என்னைய போட்டு நார் நாரா கிழிச்சிருச்சு”, என்று என் சொந்த கதையை புலம்பினேன்.

    “ பணமா மாற்றத் தெரியாத எந்த திறமையும் இங்கே மதிக்கப் படுவதில்லை தெரியுமா? என்றான், சத்யன். அப்பப்ப அலட்சியமா இந்தமாதிரி அருமையான பன்ச் கொடுப்பான்.

மேலும் தொடர்ந்தான் “படிச்சவன் படிக்காதவன் எல்லாரும் ஒரு விஷயத்தில் ரொம்ப கவனமாக இருப்பாங்கன்னா அது பணம்தான், அதிலயும் பள்ளிக்கூடத்துப் பக்கமே ஒதுங்காத சுத்த கைநாட்டுகள் எல்லாம் பணம் வரவு செலவு மூலமாதான் கணக்கு பாடம் கத்துகிறாங்க. படிக்காத தாய்மார்கள் நகை கடைல கணக்குப் பார்த்து நகை வாங்கும் அழகே தனிதான்”, என்றான்.

“பணம் சந்தோசத்தை தருமா, என்ற என் கேள்விக்கு “பணம் கவலையைத் தருமா அப்படினும் கேக்கலாமே என்றார் கடவுள்.

“பணம் சந்தோசத்தைத் தருமா என்பதில் எனக்கு சந்தேகமே” என்ற கடவுள் மேலும் தொடர்ந்தார், “ஆனால் சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்குவதில் பணம் முக்கிய பங்கை வகிக்கிறது.

“ஒரு நாளில், கடவுளை நினைப்பதை விட நாம் அதிகமாகக் காசைப் பற்றித்தான் நினைக்கிறோம். இன்னும் சொல்லபோனால் நீங்கள் ஒரு நாள் முழுவதும் பேசுகிற பேச்சில் 80 சதவீதம் பணத்தை பற்றியதாகத்தான் இருக்கும். ஒரு நாளில் 60,000 சிந்தனைகள் நமக்கு வருகிறது அதில் முதலிடம் மற்றும் சிலருக்கு முழு இடமும் பணத்தைப் பற்றித்தான் இருக்கும்.

“கடவுளிடம் நாம் அதைக்கொடு இதைக்கொடு என்கிறோமே எல்லாம் பணத்தை அடிப்படியாகக் கொண்டது.

          அன்பிலிருந்து ஆரோக்கியம் வரை, 

          வம்பிலிருந்து வைராக்கியம் வரை,

          பிறப்பிலிருந்து, இறப்பு வரை,

          கடவுளிலிருந்து, காதல் வரை,

          கொசுக் கடியிலிருந்து , மாசுபட்ட

          காற்றுலிருந்து தப்பிப்பது வரை,

           கடவுள் முடிவு பண்றாரா காசு முடிவு பண்ணுதா? காசுதான் முடிவு பண்ணுது, என்றார்.

“ஆனால் சிலரைப் பணம் கொஞ்சம் கூட சலனப்படுத்துவது இல்லையே சார்” என்றாள் அனாமிகா, கடவுளிடம்.

“அவர்கள் தங்கள் கடந்த காலத்தில் பணத்தால் ஏமாற்றப் பட்டவர்களாகவோ, வேறு ஏதாவது வழியில் பாதிக்கப் பட்டவர்களாகவோ இருப்பார்கள், அல்லது நிறையப் பணம் இருந்தும் அந்த பணத்தால் அவர்களுடைய நெருங்கிய உறவினரை நோயிலிருந்து காப்பாற்ற முடியாமல் போயிருக்கும், அது ஒரு விரக்தியினால் வந்திருக்கும்,. இங்கே நாம் ghyaanghyaanஞானியைப் பற்றி குறிப்பிடமுடியாது. அவர்கள் எல்லாத்தையும் துறந்தவர்கள், பணத்தை மட்டும் துறந்தவர்களுக்குத்தான் இது பொருந்தும்”, என்றார்.

“எனக்குத் தெரிந்தவரை நாம் பணத்தைக் காதலிப்பது மாதிரி வேற எதையும் காதலிப்பது கிடையாது. காதலித்த பெண்ணை மனைவியாக்கியதும் அவள் கொடுக்கிற இம்சையை விட பணம் நமக்கு நிறைய இம்சையை கொடுக்கத்தான் செய்கிறது ஆனாலும் கடைசி வரை மனைவியாகிய காதலியை காதலிக்கிறோமா அல்லது காசைக் காதலிக்கிறோமா?”

“மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இந்த மூன்று ஆசைகளும் கைகூடுவதும் கனவாகவே போவதும் காசில்தான இருக்கிறது” என்றார்.

“பெண்ணாசை காதலினால்தான சார் கைகூடும்”, என்றேன் அப்பாவியாக நான். “ஒரு ஆண், பெண் உறவு அன்பிலிருந்து ஆரம்பிக்கலாம் ஆனால் அந்த அன்பை தொடர்ந்து வெளிப்படுத்துவதற்கு சும்மா கண்ணே மணியேன்னு சொன்னா போதுமா?

அரை முழம் மல்லிகை, அரைக் கிலோ அல்வா இதுக்கெல்லாம் காசுதான வேணும்.

“கடவுளே, எந்த காலத்தில் இருக்கீங்க இதெல்லாம் இப்ப எந்த மகளிரும் எதிர்பார்க்கல, இதெல்லாம் கொடுத்து அன்பை காட்டிரலாம்னு நெனச்சீங்கன்னா அது கனவிலும் நடக்காது, அன்பை வெளிப்படுத்த ஆன்ட்ராய்டு போனும் ஆடி காரும் கொடுக்கணும்” என்றான் சத்யன்.

“நாம் எல்லாரும் ஒன்றை ஒத்துக்கொள்ளனும் நீங்கள் வாழ்க்கையில் சிலவற்றை விரும்புவீர்கள் அல்லது வெறுப்பீர்கள் ஆனாலும் அது நம் கூடவே ஆயுள் முழுக்கப் பயணிக்கும். இதுல உங்க சொந்த கருத்துகள் எல்லாம் எடுபடாது, அதுல ஒன்று பணம். சிறந்த முறையில் கையாண்டால் பணம் எப்பவும் மகிழ்ச்சிதான் கொடுக்கும்” என்று முடித்தார் கடவுள்.

“அதான தெரியாது”, என்று மூவரும் சொன்னோம், சிரித்தார் கடவுள்.

இன்னும் சூன்யத்தைத் தேடுவோம்…

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-7

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-6

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-5

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-4

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

 

Share This Post