சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-9

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-9

பாகம் 9: (சூன்யத்தைத் தேடி…..)

நான் தேடுற லிஸ்ட்ல பணத்தைப் பற்றி இல்லை என்றாலும் பணத்தைப் பற்றி பேசும்போது எல்லாருடைய மூஞ்சியிலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.

“சார் வாழ்க்கை ஒரு வட்டம் சார், அஞ்சு பைசா இல்லாதவன் அடுத்த நிமிஷம் ஆடி கார் வாங்குறதும், ஆடி அமாவாசைக்கு திதி கொடுக்கபோனவனுக்கே அடுத்த மாசமே திதி கொடுக்கும்படியா ஆகிறதும் நம்ம கையிலையா இருக்கு எல்லாம் கால நேரமுன்னு ஒன்னு இருக்குல்ல, என்று அறுபது வயசு நாட்டாமை மாதிரி காத்துவாக்குல அவுத்து விட்டான் சத்யன்.

  ஆஹா! கால நேரத்தைப்பற்றி பேசக்கூட கால நேரம் அமையனும்போல, ஒன்பதாவது எபிசோடுலதான் அதுக்கு நேரம் கூடி வந்துருக்கு போல, என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, காலநேரம், ஜோசியம், விதி அப்படிலாம் இருக்கா சார் இதெல்லாம் எவ்வளவு தூரத்துக்கு நம்பலாம்?, என்று அடுத்த கொக்கியை முந்திக்கொண்டு போட்டாள் அனாமிகா.

  “கண்டிப்பா இருக்குது, நம்ம ரெண்டு பேரும்(அடப்பாவி நாலுபேருடா)  இந்த ரயில்ல இந்த நாள்ல சந்திப்போம்னு விதி இருந்துருக்கு, அதான் மீட்டிருக்கோம், என்று அனாமிகாவுக்கு எதோ ஒரு அஸ்திவாரத்தைப் போட்டான் சத்யன். அதுசரி இந்த விதி இவனை எந்த சந்தில நிறுத்தப்போகுதோ யாரு கண்டா என்று நினைத்தவாறு, “எல்லாத்துக்கும் நேரத்துமேல பழி போடுறது இப்ப வாடிக்கையாகப் போச்சு, என்றேன்.

  “டெபனட்லி, டெபனட்லி, என்று ஆரம்பித்தார் கடவுள். “மனுஷனுக்கு எதுக்கு ஜாதகம் ஜோசியம் எல்லாம் தேவைப்படுது தெரியுமா?என்று விளக்கம் கொடுக்குறதுக்கு முன்னாடியே, சத்யன் குறுக்கிட்டு, “நம்ம முன்னாடியே பேசுன மாதிரி இதுவும் இனப் பெருக்கத்துக்குதான? என்றான். நான் அவனை முறைத்தேன்.

“பாஸ் மொறைக்காதீங்க, ஜாதகத்தை தூசி தட்டி எடுக்கிறதே கல்யாணத்துக்கும், பொண்ணு வயசுக்கு வந்தாவும்தான், இது ரெண்டும் எதுக்கு என்றான்? 

  “அவரு சொல்றதும் கரெக்ட்டுதான், என்று அனாமிகா சத்யன் முகத்துல ஒரு பளிச் கொண்டுவந்தாள். நீங்க சொல்லுங்க சார் என்றேன் கடவுளிடம் நான்.

   “மனுஷனுக்கு எப்பவுமே மனசுக்குள்ள ஒரு அடிமைத்தனம் இருக்கும். நம்மை ஆளுகிற சக்தி வேற எங்கேயோ இருக்கு, எல்லாத்தையும் அதுதான் தீர்மானிக்குது, என்று நினைக்கிறான். அல்லது தனக்கு நேர்வதெல்லாம், அதாவது தோல்வி, இழப்பு போன்றவற்றுக்கு தான் காரணமல்ல, எதோ ஒரு சக்திதான், அது நாளும் கோளும் செய்யுற வேலைதான்னு எஸ்கேப்பிசம் மனப்பான்மையோட திரியுறான், என்றார்.

  “அப்படின்னா நேரம் காலம் எல்லாம் பொய்யா?, எத்தன பேரு எதிர்காலத்துல நடக்குறதெல்லாம் ரொம்ப துல்லியமா கணிக்கிறாங்க, அதெல்லாம்?, என்றேன்.

   “ஒரு பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு கருப்பு பெண் வருவாள், அந்த தலைவரை கொல்லுவாள், அதன்பிறகுதான் அவள் யாரேனே தெரியும்னு ராஜீவ் காந்தியை கொலை செய்த மனித வெடிகுண்டு தணு பற்றி, பிரான்ஸ் நாட்டு தீர்க்கதரிசி நாஸ்டடாமஸ் 16 ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிருக்கிறாறே!, அதெல்லாம் எப்படி நம்பாம இருக்குறது, என்று அனாமிகா நிஜமான சந்தேகத்துடன் கேட்டாள்.

  “நாம் பிறக்கும்போதே வானில் ஒரு நட்சத்திரம் தோன்றுதாமே, நாம் இறக்கிறப்போ அதுவும் எரிஞ்சு விழுதாமே, என்றேன். மேலும், “ஒரு குழந்தை பிறக்கிறப்போ எந்த எந்த கோள்கள் வானில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதை பொறுத்துதான் நம்மோட ஜாதக கட்டங்கள் அமையுமாமே, என்று ஒரு சராசரி கேள்வியை கேட்டேன்.

   “இந்த பிரபஞ்சம் நிறைய சூரிய குடும்பங்களை கொண்டது, அதில் ஒரு குடும்பம்தான் ஒன்பது கோள்கள் அடங்கிய இந்த சூரிய குடும்பம், அதில் ஒரு kalkalகோள்தான் பூமி, அதுல ஒரு உயிருதான் நம்ம. ஏற்கனவே இந்த பிரபஞ்சத்துல நிறைய தவறுகள் நடந்துதான், இங்க உயிரினங்களே தோன்றியதுனு அறிவியல் சொல்லுது. இதுல எப்படி ஒவ்வொரு பிறப்பையும் ஒன்பது கோள்களும் துல்லியமா தீர்மானிக்கும்? கோள்களுக்கு இதுதான் வேலையா? இதுல பத்தாவது கோளும் இருக்குன்றாய்ங்க!, என்றார் கடவுள்.

 கடவுள் ரொம்ப ஆழமா போறாருன்னு தோணுச்சு, கொஞ்சம் லைட்டா பேசுவோம்னு, “கைரேகை, ஓலைச்சுவடி, ஜாதக கட்டம், மலையாள சோழி, ஒய்ஜா போர்டு இந்தமாதிரி நெறைய ஜோசியம் சொல்றாங்ள்ல அதுல எது துல்லியமா இல்லாட்டியும் கொஞ்சம் நம்புற மாத்ரி இருக்கும்னு சொல்லுங்களேன், என்றேன்.

    “எனக்கு தெரிஞ்சவரைல ஒரு சில குறி சொல்றவுங்களுக்கு ஒரு பக்க்ஷி சொல்லும், அதாவது instinct னு சொல்வாங்க, நம்மள பார்த்த உடன் கிளி, கைரேகை, கட்டம்லாம் தாண்டி  அவங்களோட உள்ளுணர்வு சொல்ல ஆரம்பிக்கும், அதை நம்பலாம். அது எல்லாருக்கும் வந்துறாது, நீங்க நல்ல ரிசீவரா இருந்தீங்கன்னாதான் பிரபஞ்சத்துல இருந்து அதை உள்வாங்கி சொல்ல முடியும். சில சின்ன பசங்க கேரளாவுல இருந்து வராங்க ஒரு 13, 14 வயசுக்குள்ள இருப்பாங்க, அவங்க முகத்துல பால் வடியும், நம்மை பார்த்த உடன் கட கடனு சொல்ல ஆரம்பிப்பாங்க அதுதான் உள்ளுணர்வு சொல்றது ஆனால் அது ஒரு சில நிமிடங்கள்தான் நீடிக்கும், உங்க பேரு, ராசி, நட்சத்திரம் கைரேகைனு எதுமே கேக்காம, உங்களுக்கு ஜோசியம் பார்க்கவானு அனுமதிகூட கேட்காமல் குறி சொல்வாங்க, அது நம்புற மாதிரி இருக்கும், என்றார் கடவுள்.  

             “என்ன கடவுளே? கடைசில நீங்களும் ஜோசியத்தை நம்பலாம்கிற மாதிரிதான பேசுறீங்க, இதுக்கு நாங்க எவ்வளவோ பெட்டர், ஆமா ஜோசியத்தை நம்புறோமுன்னு சொல்லிட்டு போறோம், என்று கடவுளின் காலைவாரினான் சத்யன்.

      அனாமிகா, சத்யனுக்கு சப்போர்ட்டா ஆரம்பித்தாள், “கடவுள் பேசுறதைப் பார்த்தால் எது மாதிரி இருக்கு தெரியுமா?

      நான் ஜோசியத்தை நம்புறதில்லை,

      எதிலையும் நானே முட்டி மோதி

      ஜெயிச்சு வருவேன்,  

      ஏன்னா நான் சிம்மராசிக்காரன்!

அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு, என்றாள்.

     கடவுளும் சேர்ந்து சிரித்துவிட்டு. “நானும் இந்த உலகத்தில்தான இருக்கேன் எனக்கும் எதுலயும் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கதான செய்யும் என்றார்.

   ஒன்று புரிந்தது, ஏத்துக்கிறோமோ இல்லையோ, விரும்புகிறோமோ இல்லையோ சில விஷயங்களை செஞ்சுதான் ஆகணும் கல்யாணம் செஞ்சுக்கிற மாதிரி!

                                 இன்னும் சூன்யத்தைத் தேடுவோம்…..     

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-8

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-7

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-6

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-5

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-4

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-3

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-இரண்டாம் பாகம் செல்வதற்கு முன்

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

 

Share This Post