சூன்யத்தைத் தேடி… (Hunting towards Nothing )

சூன்யத்தைத் தேடி… (Hunting towards Nothing )

முன்னுரை:    

ஒரு புத்தகத்தைப் படிப்பவர்களில் 90% முன்னுரை படிப்பதில்லை. எனவே பின்னுரை(!) எழுதலாம் என்று ஒரு யோசனை வைத்திருக்கிறேன் அதுவும் சந்தேகம்தான், ஏனெனில் இது ஒரு தொடர் சின்ன தொடர்தான் 10 பாகங்கள் வரலாம். பத்து பாகங்களையும் தொடர்ந்து படிப்பவர்களுக்குத்தான் பின்னுரை தேவைப்படும். இது வாரத்தொடரா? அல்லது மாதத்தொடரா? என்று கேட்டால் இது ஒரு தேடல் தொடர், எப்ப அடுத்த பாகம் வரும் என்று நீங்கள் கேட்கும் முன் அடுத்த பாகம் வரும். இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் கருத்துகள் எல்லாம் சுத்தமாக திருடப்பட்டவைதான். கொஞ்சம் நாகரிகமாகச் சொன்னால் நம்மை சுற்றியுள்ள மக்களின் உரையாடலிருந்து திரட்டப்பட்டவை. நாம் எங்கிருக்கிறோமோ அங்கிருந்தே எடுக்கப்பட்டது. நாம் எதைக் கொண்டு வந்தோம்? எதைக் கொண்டுபோகிறோம்? இங்கிருந்து எடுக்கப்பட்டதை இங்கேயே கொடுத்துவிடுவோம். முன்னுரை எழுதவில்லை என்று சொல்லிவிட்டு இதுவரை கொடுத்திருப்பது என்ன என்று உங்களுக்கு கோபம் வருவதற்குள் இதோ சூன்யத்தை தேட ஆரம்பிப்போம்.

இன்னும் ஓரிரு தினங்களில் முதல் பாகம்…

 

Share This Post