சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)b4-2

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)b4-2

சூன்யத்தை தேடி….. ( இரண்டாம் பாகம் செல்வதற்கு முன் )

முன்னுரை மற்றும் பாகம் 1 படித்துவிட்டு கல்வீச்சுகளையும், பூச்செண்டுகளையும் அனுப்பியிருந்தீர்கள். சிலர் படித்துவிட்டு சைலண்டாக இருக்குறீர்கள், உங்களுடைய மௌனம் மனதிற்குள் கிலியை உண்டுபண்ணுகிறது. எதுக்கு எதாவது விமர்சனம் செய்யப்போய் இவன் பாட்டுக்கு பெருமாள் முருகன் ரேஞ்சுக்கு(!) போய்விடுவானோ என்று சிலரின்  பயமும் எங்களுக்கு புரிகிறது. இப்பத்தான ஆரம்பிச்சுருக்க இன்னும் கொஞ்சம் போகட்டும் பார்ப்போம் தொவச்சு தொங்கபோடுறோம் என்று சிலர் காத்துகொண்டிருப்பதும் தெரிகிறது. இன்னும் சிலருக்கு நேரம் இல்லை எங்களுக்கு ஒரு சில வார்த்தைகள், வசவுகள் மற்றும் வாழ்த்துகள் சொல்ல. எப்படி இருந்தாலும் படித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

இரண்டாம் பாகம் தயாராகிக்கொண்டு இருக்கிறது, இன்னும் ஒருசிலநாளில் உங்கள் மேஜைத்திரையில், அல்லது மடித்திரையில் அல்லது உள்ளங்கை திரையில் தோன்றும். இதில் கொஞ்சம் அப்பிடிக்கா இப்பிடிக்கா விஷயத்தைப்பற்றி பேசி (மன்னிக்கவும் எழுதி) இருக்கிறோம். எனவே இரண்டாம் பாகம் படிக்கும்போது வயதுக்கு வராதவர்களையும் வெண்குழல் விளக்கு ஆசாமிகளையும் உடன் வைத்துக்கொள்ளாதீர்கள். முன்னுரை எழுதமாட்டோம்னு சொல்லி ஒவ்வொரு பாகத்துக்கும் முன்னுரை எழுதுகிறாயே நண்பா என்று நீங்கள் கேட்பது எனக்கு காதில் சரியாக விழவில்லை, மன்னிக்கவும். சந்திப்போம் பாகம் இரண்டில், விரைவில்.

சூன்யத்தைத் தேடி (Hunting towards Nothing)-1

முன்னுரை படிக்க

Share This Post