தப்புத் தப்பாய் – 4

தப்புத் தப்பாய் – 4

பாகம் 4: (தப்புத் தப்பாய்…)

“சிக்மண்ட் பிராய்ட்..? தெரியும், உளவியலின் தந்தை, அவரு உன்ட என்ன சொன்னாரு?” என்றேன் கிண்டலுடன்.

“என்ட சொல்லல, நம்மட்ட சொன்னாரு, என்றாள் அதே கிண்டலுடன். “இட், ஈகோ, சூப்பர் ஈகோ பற்றி சொல்லிருக்காரு. அதாவது நம்ம மனச மூணு அடுக்குகளா பிரிக்கலாம், கீழ்நிலையில் உள்ளது ‘இட்’(id) அதுதான் ஒரு பொருளை அல்லது ஒருமனிதரை பார்த்தவுடன், நம் மனதில் என்ன தோன்றுகிறதோ, தோன்றியதை அப்படியே வெளிக்காட்டத் துடிக்கிறது. அதை அப்படியே வெளிக்காட்டுனோம்னா, அது நாகரிகமில்லாத மனிதனா நம்மை அடையாளம் காட்டிவிடும்.

எடுத்துக்காட்டா பூக்களைப் பறிக்காதீர்னு அறிவிப்பைப் பார்த்த உடனே, ஒரு பூவ பறிக்கனும் போல ஆசை இருக்கு, அந்த பூவ பறிச்சிடீங்கன்னா ‘இட்’ வெளிப்பட்டுருச்சு.

இந்த ‘இட்’ தன்னோட வேலையை அடிக்கடி காட்டுச்சுன்னா உங்களுக்கு கெட்ட பேரு வந்துரும், எனவே இது தப்பு அப்படி செய்யக்கூடாதுன்னு உங்களை கட்டுப்படுத்துவது, மனசோட அடுத்த அடுக்கான ‘ஈகோ’வோட வேலை.  இதுதான் நம்மளை கொஞ்சமாவது மனுசனா இருக்கவைக்குது.

ஈகோவும் கட்டுப்படுத்த முடியாம விட்டுக் கொடுத்து, உங்க மனசு, நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை செய்யணும்னு ஆசைப்படும்போது, சூப்பர் ஈகோ உங்கள கட்டுப்படுத்த வருது, அது, உங்களுக்கு, நீங்க யாரு, சமூகத்துல உங்களுக்கு என்ன அந்தஸ்து, நீங்க எப்பேற்பட்ட பரம்பரை, சோ நீங்க கீழ்த்தரமா இதல்லாம் செய்யக்கூடாதுன்னு உங்களை கட்டுப்படுத்தும்.

ஒரு பன்னிரெண்டாவது படிச்ச பொண்ணு, இவ்ளோ பேசுறது ஆச்சரியமா இருந்தது எனக்கு. “சரி நான் கேட்ட கேள்விக்கு இது என்ன பதில்?”

“உங்க கேள்வி என்ன?, எதுக்காக கவிதை நோட்டை மறுபடியும் வச்சுட்டு போனேன் அதான? அதுக்குதான் சொன்னேன் என்னோட ‘இட்’ ட ‘ஈகோ’ கட்டுப்படுத்தலன்னு, அதாவது இந்த கவிதை நோட்டை நீங்க படிக்கணும்னு என்னோட மனசு ஆசைப்பட்டது, அதனால என்ன எனக்கு கிடைக்கும்?, நீங்க என்ன நினைப்பீங்கன்னு, ஈகோ கட்டுப்படுத்த முயற்சி பண்ணி தோத்துடுச்சு. அதான் மறுபடி வச்சுட்டு போனேன், ஆனால் முதலில் நிஜமாவே மறந்து போய்தான் வச்சுட்டு போனேன்”.

“அப்படின்னா நான் படிச்சது தப்பில்லை?! அப்பாடி என்னோட ‘இட்’ நியாயப்படுத்தபட்டது. சரி அடுத்த கேள்வி, இங்க நீ இருக்கும்போது உங்க அம்மா, ஏன் கூப்பிடமாட்டங்கன்னு சொன்ன?”.

“ அதுவா?, என்னைய என்ன பண்ண அப்புடின்னு எங்க அம்மாவுக்கு குழப்பம் பிளஸ் கவலை அதிகம். ஏன்னா நான் சில சமயம் ரொம்ப புத்திசாலியா பேசுறேன், சில சமயம் அடி முட்டாளா பேசுறேன், என்னைய எவனுக்கு கட்டி கொடுக்க? அவனுடன் அனுசரிச்சு போவேனான்னு அம்மா முடிய பிச்சுகிறாங்க. பற்றாக்குறைக்கு, நான் வேற, எனக்கு கல்யாணம்லாம் பண்ணிவச்ச அடுத்த நாளே யார் கூடவாது ஓடிப்போயிருவேன்னு அப்பப்ப மிரட்டுவேன். அதுனால என்னை நல்லா புரிஞ்சவன்தான் எனக்கு சரிப்பட்டு வருவான்னு நினைக்கிறாங்க. இதுல, நான் யாரையும் லவ்வு வேற பண்ணி தொலைக்க மாட்டேங்கிறேனாம் அம்மாக்கு ரொம்ப கவலையா இருக்கு(!)”.

“இன்னும் எனக்கு பதில் வரலையே?”

“புரியலையா?, நான் உங்கட்ட பேசிட்டு இருக்குற நேரம், நீங்க என்னைய நல்லா புரிஞ்சுகுறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்குன்னு அம்மா நினைக்கிறாங்கன்னு நான் நினைக்கிறேன். அதான் நம்ம பேசிட்டு இருக்குறப்ப மீரான்னு கத்தி தொந்தரவு பண்ணாம இருக்காங்க”, என்று மிக சாதாரணமாகச் சொன்னாள்.

“எதையாவது தப்புத் தப்பாய் புரிஞ்சுக்காத”, என்றவுடன் “மீரா….ஆ….” என்ற குரல் கீழே இருந்து வந்தது. அவளைப் பார்த்து, நான் சொன்னது சரியா என்று அர்த்தமுடன் சிரித்தேன். “அப்பா வந்துருப்பாங்க, அதான் அம்மா கூப்புடுறாங்க”, என்று அவள் நினைத்ததுதான் சரின்னு சொல்ற மாதிரி ஒரு லுக்கு விட்டாள்.

“கவிதை நோட்டை வச்சுட்டு போகவா?”  என்றாள்,

“கண்டிப்பா நான் படிக்கணும் வச்சுட்டு போ”.

வாசல் படியை விட்டு மறையும்போது அவள் என்னைய பார்ப்பானு என் உள் மனசு சொன்னது, ஆனால் பார்க்காமல் பறந்துவிட்டாள். அடச் சே உள் மனசும் தப்புத் தப்பாய் நினைக்க ஆரம்பிச்சுருச்சுன்னு மனசுக்குள்ளேயே யோசித்தவாறு சப்பாத்திக்கு மாவைப் பிசைய ஆரம்பித்தேன்.

இரவு உணவை முடித்து, படுக்கைக்குச் செல்ல, பத்து மணி ஆகிவிட்டது. கவிதை நோட்டைத் திறந்தேன், ஒரு சில கவிதைகளைப் படித்தேன், அதில் ஒன்று நிமிர்ந்து உக்கார வைத்தது,

காலை எழும்போது

சூரியனுடன் சேர்ந்து

யாரோ ஒருவரின் நினைவும்

உன்னோடு எழும்

இரவு சந்திரனுடன் அதே

யாரோ ஒருவரின் நினைவும்

உன்னுடைய தூக்கத்தில்

பங்கு கேட்கும்

அந்த யாரோ ஒருவர்தான்

     உன்னுடைய ஒருவர்!

கவிதையின் நினைவுகளில் தூங்கிப் போனேன். மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது மீராவின் நினைப்புதான் என்னுடன் முதலில் எழுந்தது.

டிரிபிள் எம் எனப்படும் மண்டே மார்னிங் மென்டாலிட்டியில் பரபரப்பாகக் கிளம்பி, அலுவலகம் சென்றுவிட்டேன். அனைவரும் புதிதாக தெரிந்தார்கள். என்னைப் பார்த்து அர்த்தமுள்ள புன்னகை செய்வதாகத் தோன்றியது. ஓ…நோ….எதையாவது நானாய்த் தப்புத் தப்பாக….

எனது அடுத்த இருக்கை சின்னப் பூசணி சௌமியா தலையை ஒரு சாய்த்து என்னைப் பார்த்தவாறு,

“என்ன கிருஷ் facfafமுகத்துல ஒரு பளிச் தெரியுது, என்ன விசேஷம்?” என்று நட்பிற்கும் காதலுக்கும் இடையேயான ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

“நத்திங், எவரிதிங் கோயிங் அஸ் யூசுவல்”, என வழிந்தேன். “என்ன ஆத்துக்காரர் வந்தாரா? ரெண்டு நாள்ல கொஞ்சம் உப்புனாப்ல இருக்கு?” என்று சாதாரணமாகக் கேட்பது போல் கொஞ்சம் அர்த்தத்துடன் கேட்டேன்,

“அவரு வந்து…” என இழுத்து “சாப்ட்டாரு” என முடித்தாள்.

“ஓ! வராமலேயே இவ்வளவு பூரிப்பா?” என்றதுக்கு, “போடாங்….” என்று முடிக்காமல் விட்டாள்.

“உங்ககிட்ட ஒன்னு பெர்சனலா கேக்கணும், எப்ப ப்ரீயா இருப்பீங்க?” என்ற என் கேள்விக்கு,

“லூசாடா நீ?, எவ்வளவு பரபரப்பான ஆபிஸ்லயும், எவ்வளவு முக்கியமான வேலை பாக்குற யாருகிட்டையும், பெர்சனலா பேசணும்னு சொல்லு, போட்டது போட்ட மாதிரி ஓடி வருவாங்க”, என்று அமர்ந்தவாறே சேரை என்னை நோக்கி தள்ளி அருகில் வந்தாள். முட்டியும் முட்டியும் முட்டியதை கண்டுகொள்ளாமல், “பெர்சனல விட ஆபிஸ் வேலையா முக்கியம், சொல்லு, சொல்லு”, என்று கொஞ்சினாள்.

இங்கே சின்னப் பூசணியைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். திருமணமானவள், சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் சின்னப் பூசணி போலவே இருப்பாள். வயது என்னைவிட ஏழு கூடுதல், என்பது கூடுதல் தகவல்.. தன்னோட வாழ்வில் சிறப்பாக ஒன்னும் இல்லை என்று குறைபட்டுக் கொண்டு, அடுத்தவர்களுடைய வாழ்வின் சுவாரஸ்யமான பகுதிகளை சேகரிப்பதில் விருப்பமுள்ளவள். கணவன், ஒரு இரவு பேருந்தில் பயணம் செய்தால், இங்கு வரும் தூரத்தில் வேலை பார்க்கிறார். மாதம் ஒரு முறை வருகிறார் இரண்டு நாட்கள் உடனிருப்பார், நாற்பது மணி நேரம் பேசுவார், ஆறு மணி நேரம் தூங்குவார், ரெண்டு மணி நேரம் சண்டை போட்டு சமாதானமும் ஆகிக் கிளம்பிவிடுவார்.

எல்லாரிடமும் ஹாய் சொலுவாள், என் மேல் கொஞ்சம் பிரியம் கூடுதல். எப்படித் தெரியும் என்கிறீர்களா? எனக்கு ஏதாவது பிடிக்கும் என்று சொன்னால், அது சாப்பாடு ஐட்டமாக இருந்தால், அந்த வாரத்தில், ஏதாவது ஒரு நாள் அவள் டிபன் பாக்ஸில் அது இருக்கும், தற்செயலாகா கேட்பது போல் இது உனக்கு பிடிக்கும்ல இந்தா எடுத்துக்கோ என்பாள்.

சாப்பாடு தவிர வேறு ஏதாவது எனக்குப் பிடித்த விஷயம் என்றால் அது பற்றிய கூடுதல் செய்திகளைச் சேகரித்துச் சொல்லுவாள். அது மட்டுமில்லாமல் நாங்கள் இருவரும், அடுத்தடுத்த இருக்கையாதலால் அதிக நேரம் பேசுகிறோம், சண்டை போடுகிறோம். ஸ்டாக்ஹோம் சிண்டரமும், என்மேல் அவளுக்கு உண்டான பிரியத்தை அதிகப்படுத்திவிட்டது.

மற்றபடி, ஒருமுறை, என்னுடைய முழங்கை, தற்செயலாக அவளுடைய பஞ்சுப் பொதிகளில் உரசியபோது, மன்னிப்புக் கேட்ட என்னை மண்டையில் செல்லமாகக் கொட்டிவிட்டு சென்றாள். எனவே எனக்கும் அவள் மேல் கொஞ்சம் கிரேஸ் அதிகம். இதுதான் ‘சௌ’ என்ற சின்னப் பூசணி.

“பன்னிரெண்டாவது படிப்பு முடிச்சிட்டு, காலேஜுக்குப் போகாமல் வீட்டில் இருக்கும், ஒரு பொண்ணோட மெச்சூரிட்டி எப்படி இருக்கும்? சொல்லுங்களேன்”, என்று நான் கேட்டவுடன் அவள் ஆரம்பித்தாள்……

தப்புத் தப்பாய் தொடரும்….

தப்புத் தப்பாய் – 3

தப்புத் தப்பாய் – 2

தப்புத் தப்பாய் – 1

தப்புத் தப்பாய்

 

Share This Post