தப்புத் தப்பாய் – 6

தப்புத் தப்பாய் – 6

பாகம் 6: (தப்புத் தப்பாய்…)

      இழுத்து அறையவும் செய்யலாம்….. ரொம்ப படுத்துறா.

“என்னைய என்ன பண்ணலாம்னு யோசிக்கிறீங்களா? ஒண்ணும் பண்ணமுடியாது. சொல்லுங்க எத்தன தடவ நெனச்சீங்க?”

“உண்மையா சொன்னா இன்னைக்கு முழுசும் நெனச்சேன்”.

“வெரிகுட், ஸ்மார்ட் பாய்!, யாருகிட்டயும் என்னைப் பற்றி டிஸ்கஸ் பண்ணீங்களா?”

சௌமியா பற்றி சொல்லலாமா வேணாமா? வேண்டாம் என்ற அவசர முடிவுக்கு வந்து இல்லையே என்றேன். ஐந்து நொடி அமைதிக்குப் பிறகு, “நீ இப்ப ப்ரீயா இருக்கியா? உண்ட கொஞ்சம் பேசணும்”.

“ஆகா!, சொல்லுங்க”, என்றவள் ஒரு குறு குறு பார்வை பார்த்தாள்.

“ இல்ல, ஒரு இருபத்தி நாலு மணி நேரத்தில, நம்ம ரொம்ப நெருங்கிப் பழகுறமாதிரி இருக்கு, இது எங்க கொண்டுபோய் விடும்? எப்படி நீ என்னைய இவ்ளோ நம்புற? நம்ம இப்பவே இதப் பற்றி கொஞ்சம் ஓப்பனா பேசிட்டா நல்லது”.

“ பரவால்ல ஒரு ஆண் இவ்ளோ வெளிப்படையா, இப்படி கேக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ஒரு உண்மைய நேருக்கு நேரா பார்க்க ஒரு துணிச்சல் வேணும், எனக்கும் நீங்க கேட்டது இன்னைக்கு தோணுச்சு, ஆனால் அதுல இருந்து தப்பிக்க மனசு பார்க்குது. இந்த கவிதையைப் படிங்க இன்னைக்கு நான் எழுதுனது, இதுல என்னோட பதில் இருக்கலாம்” என்றவள் அந்த கவிதை நோட்டில் ஒரு பக்கத்தை புரட்டி என்னிடம் தள்ளினாள்.

     இருசக்கர வாகனத்தில்

     தேசிய நெடுஞ்சாலையில்

     பயணம் செய்யும் ஒரு இளைஞன்

     படக் கென்று வண்டியை ஓரங்கட்டி

     சடக் கென்று ஜிப்பைத் திறந்து

     சிறுநீர் கழிப்பதைப் போல

     ஒரு ஆணையும் பொண்ணையும்

     கோர்த்து விடுவதை

     மிக லாவகமாகவும்

     விரைவாகவும் செய்யும்

     இந்த இயற்கைக்கு

     விவஸ்தை இல்லை!

வாய் விட்டு சிரித்துவிட்டேன். “ ஏங்க உங்க உவமைக்கு வேறு ஆள் கிடைக்கலையா அந்த இளைஞன்தான் கிடைச்சானா?”

சிரித்துகொண்டே சொன்னாள், “ என்னைப் பொறுத்தவரை ஒரு சில விஷயங்கள் கொஞ்சம் குழப்பமா இருந்தா இயற்கைட்ட விட்ருவேன், காட்டாறு மாதிரி அது எங்க கொண்டு போயி விட்டாலும், விளைவைப் பற்றி யோசிக்கமாட்டேன். நம்ம விஷயத்துல ஆராயிரதுல எனக்கு விருப்பம் இல்ல, எனக்கு உங்கட்ட பேச புடிச்சுருக்கு அவ்ளோதான்”.

மிக இயல்பாக சொல்லிவிட்டாள்.

“இதுல கொஞ்சம் நடை முறை சிக்கல் இருக்கு” என்று நான் ஆரம்பித்தேன், என்ன இருந்தாலும், ஒரு ஆணும் பெண்ணும் நெறய பேசுனாங்கன்னா, சுவராஸ்யத்துக்காக அவங்க சில எல்லைகளைக் கடந்து பேசவேண்டிருக்கும், அப்பதான் அவங்க நீண்ட நாட்களுக்கு நெருக்கத்தில இருப்பாங்க. ஒரு பொண்ணா உனக்கு சில சங்கடங்கள் வரலாம்”.

“நம்ம ரெண்டு பேரும் சாதரணமா பேசுனாலும் சில விமர்சனங்கள் வரத்தான் செய்யும், பரவால்ல சமாளிச்சுருவேன்”, என்றாள்.

சரி இன்னொரு விஷயத்தையும் தெளிவா சொல்லிறேன், எனக்கு காதல், கல்யாணம் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல, அதனால அந்த நினைப்பில் நீ என்ட பழகாத, அது வராம பாத்துக்கோ, ஆனால் எனக்கு பிடிச்சு உனக்கும் பிடிச்சதுன்னா எப்ப வேணும்னாலும் எல்லை மீறுவேன்”.

“சரி”

சரி என்பது ரெண்டே எழுத்து, உச்சரிக்கும்போது மாத்திரையும் குறைவு ஆனால் இது ஏற்படுத்தும் விளைவுகள்? பல போர்கள் நடந்திருக்கிறது, பல இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது பல பாலங்கள் கட்டப்பட்டிருக்கு, எப்பவும் பெரிய  யோசிப்பிற்கு பிறகு சொல்லவேண்டிய ஒரு சின்ன வார்த்தை. சடக்கென்று சொல்வதற்கு மிக தைரியம் வேண்டும், அது மீராவிடம் இருந்தது.

“நீ செல்போன் வச்சுருக்கியா?”

“இல்ல, அதெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல” அதுவும் நல்லதுக்குதான், “மீரா……ஆ……”,

“அழைப்பு வந்துருச்சு கெளம்பு”

பறந்துவிட்டாள்.

எனக்கு மனசு லேசாகிவிட்டது நல்லதோ, கெட்டதோ கொஞ்சம் வெளிப்படையா பேசிட்டா குறைஞ்சபட்சம் குற்றவுணர்ச்சியாவது மிஞ்சும். மீராவுக்கும் நல்லது கேட்டது தெரியிற வயசுதான்.

இரவு உணவை முடித்து படுக்கைக்குச் சென்றேன். சௌமியா கூப்புடுறேனு சொன்னாளே? செல் சிணுங்கியது, அவளேதான்.

“ஹாய் இப்பதான் நெனச்சேன், சொல்லுங்க”.

“நீ கிளம்புறப்போ உனக்கு கால் பண்றேன்னு சொன்னேன், ஆனால் எதுக்குன்னு தெரியல”.

  என்னாங்கடா எல்லாரும் வெளிப்படையா பேச ஆரம்பிச்சுட்டாங்களா?,

“சரி நான் சொல்றேன், நான் மீராட்ட பழகுறதுனால நீங்க கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டீங்க, சரியா?

“ம்ம் சரிதான் ஆனால் நான் அப்படி நினைக்கிறது தப்புத்தான?”

“இல்லை, நீங்க நினைக்கிறது சரிதான், எல்லாருக்கும் கொஞ்சம் பொசசிவ் இருக்கத்தான் செய்யும், அது ஒரு இயல்பா தோன்றுகிற உணர்வுதான், அதுல எந்த குற்ற உணர்வும் வேண்டாம். ஆனால் அதை நம்ம எப்படி கொண்டுபோறோம் அப்படிங்கிறதுலதான் நம்மோட முதிர்ச்சி இருக்கு. ஆப்டர் ஆல் வீ ஆர் ஹுமன் பீயங்க்ஸ்”.   .

“உன்ட நெறையா விஷயங்கள் எனக்கு பிடிச்சிருக்குடா, அதுல அப்பப்ப நீ இந்த மாதிரி ரொம்ப மெச்சூர்டா, வெளிப்படையா பேசுறது”.

“நன்றி, உங்ககிட்ட நானும் சில விஷயங்களை வெளிப்படையா பேசணும்னு இருக்கேன், இப்ப பேசலாமா? எனக்கும் உங்களைப் பிடிக்கும், அதைப் பத்திதான் நம்ம கொஞ்சம் ஓப்பனா பேசிட்டா நல்லது”.

“ரொம்ப சந்தோசம்டா, நீ இப்படி கேக்குறது, சொல்லு எண்ட என்ன கேக்கணும்?”

இன்னும் கேக்கலாம்…..

தப்புத் தப்பாய் – 5

தப்புத் தப்பாய் – 4

தப்புத் தப்பாய் – 3

தப்புத் தப்பாய் – 2

தப்புத் தப்பாய் – 1

தப்புத் தப்பாய்

Share This Post