தப்புத் தப்பாய் – 7

தப்புத் தப்பாய் – 7

பாகம் 7: (தப்புத் தப்பாய்…)

சௌமியா, பேசுன்னு சொன்னவுடன், எப்படி ஆரம்பிக்கன்னு தெரியல, பெண்களிடம் சில முக்கியமான விஷயங்கள பேசணும்னா, கொஞ்சம், இல்லை நெறையா யோசிக்கணும்.

மூணு நாளா தயங்கி தயங்கி

        ஒரு முத்தம் கேட்டால்

        பொசுக்கென்று கொடுத்துவிடும்

        பெண்ணிடம்

        ஒரு முப்பது ரூபாய்

        கேட்டுப் பாருங்கள்

        முன்னூற்று எட்டு

        கேள்விகள் கேட்பாள்

அவங்க தப்பா எடுத்துக்குவாங்களோன்னு நெனச்சு சொல்ற ஒரு விஷயத்தை ரொம்ப கேசுவல்லா எடுப்பாங்க, சாதாரண விஷயம்தான, இதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்டா அத பெரிசா எடுத்து தொவச்சு தொங்கப் போட்ருவாங்க.

சரி சந்தைக்கு வந்தாச்சு சனங்கள பார்த்து கூச்சப்பட்டா ஆகுமா? பேச்சை ஆரம்பித்தேன்,

“சௌமியா நம்ம ரெண்டுபேருக்குள்ள உள்ள உறவைப் பத்தி நீ என்ன நெனைக்கிற?”

“ ம்ம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு, கொஞ்சம் ரொமான்டிக்கலாவும் இருக்கு”

“ரொமான்டிக்கலா? எப்படி சொல்ற?”

“ உண்ட பேசும்போதும், உன்னையபத்தி நினைக்கும்போதும், மனுசுல கொஞ்சம் பட படப்பு தெரியுது, நம்மகூட நெறைய பேரு வேலை பார்க்குறாங்க ஆனால் அவங்களைப் பத்தி நினைக்கும்போதோ இல்ல அவங்கட்ட பேசும்போதோ என்னால இயல்பா இருக்கமுடியுது”

“ கேக்குறதுக்கு சந்தோசமா இருக்கு, ஆனால் உண்ட இப்படி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத, நீ இன்னொருத்தர் மனைவின்னு என்ட பேசும்போது உனக்கு தோணலையா?”

ஒரு சில வினாடி அவள் எதுவும் பேசவில்லை, நானும் பொறுமையாக இருந்தேன், இந்த கேள்வியின் கணம் அப்படி,

“ உண்ட பேசுறப்போ, எனக்கு அது தோணாது, ஆனால் உன்னைப் பற்றி நெனைக்கிறப்போ தோணும்டா, கண்ட்ரோல் யுவர்செல்ப்னு உள்ள ஒரு குரல் கேட்கும், அடுத்தநாள்ல இருந்து உண்ட பேசுறத குறைக்கணும்னு நெனப்பேன், ஆனால் மறுநாள் உன்னைய பார்த்தவுடன் எனக்கு எல்லாமே மறந்துடும்டா, நான் என்ன பண்ண?, இப்படி பேசுறேன்னு என்னைய மட்டமா எண்ணாதடா ப்ளீஸ், நீ கொஞ்சம் வெளிப்படையா பேசுவோம்னு சொன்னதாலதான் இத சொல்றேன்”

“ சௌமியா, சௌமியா இப்ப இங்க இருந்தேனா உன்னைய தூக்கி ஒரு சுத்து சுத்திருப்பேன்”

“போடா எரும, நடக்குறத பேசு, நீயாவது என்னைய தூக்குறதாவது?”

“இல்ல சௌமியா உலகத்துலயே ரொம்ப சந்தோசமானது எது தெரியுமா? நாம ஒருத்தர லவ் பண்றோம்கிறதும், நம்மள ஒருத்தர் லவ் பண்றாங்கன்றதும்தான்”.

“அப்ப இத லவ்வுங்குறியா எரும?”

“இல்ல சௌமியா லவ்வுதான் இருக்கணும்னு அவசியம் இல்ல, ஆனால் அது, ஒரு பிடித்தம், அக்கறை, பாசம்னு கூட சொல்லலாம், அதாவது நம்மளை அடிக்கடி ஒருத்தரு நினைக்கிறாங்க, அவங்களோட நினைப்பின் பெரும்பகுதியில் நாம இருக்கோம்கிறது ஒரு சுகம்தான்”

“நீ என்னைய அடிக்கடி நினைப்பியாடா?”

“என்ன சௌம்யா இப்படி கேட்டுட்ட அடிக்கடி நினைப்பேன்”

ஒரு சில வினாடி மௌனமாக இருந்தாள்.

“என்னாச்சு சௌமியா?”

“ஒண்ணுமில்ல” என்றவளிடம், “எதையும் வெளிப்படையா பேசுன்னு சொன்னேன்ல?”

“இது எங்க போயி முடியும்டா?”

“எங்கயும் போகாது அதிகபட்சம் போனால் ஒரு அணைப்பிலும் ஒரு சில இச்சுகளிலும் திருப்தியடஞ்சுரும்”

“ஆனால் நம்ம நட்பு எப்பவும் தொடரனும்டா”

அது தொடருமானு சந்தேகம் வந்துட்டா, அது தொடருவது சந்தேகம்தான், பாக்கலாம், எனக்கு உன் மேல எப்பவும் வெறுப்பு வராது குண்டுபூசணி”

“பன்னி, மனசு ரொம்ப லேசா இருக்குடா, இன்னொன்னுதான் இப்ப கொஞ்சம் தொந்தரவு பண்ணுது”,

“நான் சொல்றேன் மீரா விஷயம்தான?”

“ஆமாம், என்ன பண்ண போற அவளை?”

“தெரியலை சௌமியா, ஆனால் அவ என்னைய ரொம்ப படுத்துறா, சரி பாப்போம், நீ அத பெரிசா எடுத்துக்காத, அதிகபட்சம் எங்களுக்குள்ள நெருக்கம் கொஞ்சம் கூடும், இப்பதான் அவட்டையும் கொஞ்சம் வெளிப்படையா பேசினேன், ஏதாவது காதல், கல்யாயணம்னு கனவெல்லாம் வச்சுக்காதனு, அவளும் கொஞ்சம் மெச்சூர்டாதான் இருக்கா, பாப்போம்”.

“சரிடா கொஞ்சம் ஜாக்கிரதயாவே இரு, உன்னைய சொந்தம் கொண்டாட எனக்கு உரிமை இல்லை, ஆனாலும், கொஞ்சம், இல்லை நெறைய எனக்கும் பொசசிவ் இருக்கு. என்ன பண்ணாலும் எண்ட அப்ப்பப்ப சொல்லிருடா, அட்லீஸ்ட் அந்த சந்தோசமாவது எனக்கு கிடைக்கட்டும்?!”

“பூசணி உண்ட சொல்லாம யாருட்ட சொல்லப் போறேன் ஓககே நிம்மதியா தூங்கு நாளைக்கு பாப்போம், குட் நைட்”

“குட்நைட், தேங்க்யூ டா, ஒண்ணு சொல்றேன் தப்பா எடுத்துக்காத, இதுவரை நான் யார்கிட்டயும் சொல்லாத ஒண்ணு”

கொஞ்சம் குழப்பத்துடன், “என்ன சொல்லு” என்றேன்.

“மிஸ் யூ டா” என்றாள், அப்படி சொல்லும்போது அதில் உள்ள உணர்வு மிகவும் உண்மையா இருந்தது.

“ஹா, ஹா, இவ்ளோதானா?, மீ டூ மிஸ் யு செல்லம்”

“ம்ம்ம்” என்றவள் அணைத்துவிட்டாள் செல்லை.

எனக்கு டபுள் ரிலாக்ஸா இருந்தது. மீரா, சௌமியா, ரெண்டு பேரிடமும் இனிமேல் எதுன்னாலும் ஓபன் டாக்கிங்தான்னு முடிவு பண்ணிட்டேன், அது எவ்ளோ சாத்தியம்னு தெரில ஆனால் அதுதான் எனக்கு நல்லது, என்னால எதனுடனும் வாழ்ந்திட முடியும் ஆனால் குற்ற உணர்வுடன் மட்டும் வாழ முடியாது. அப்படி குற்ற உணர்வு இல்லாம வாழ்றதுனாலதான், என்னோட வாழ்க்கை, தண்ணீருல முக்கி, பிழியாம் கொடில போட்ட போர்வை மாதிரி கனமா இல்லாம, நல்லா வெயில்ல காஞ்ச சேலை மாதிரி லேசா இருக்கு.

தூக்கம் கண்ணை சுழற்றியது, அரை குறை தூக்கத்தில் ஒரு சேலையின் முந்தானை என்னுடைய முகத்தை உரசி சென்றது போலிருந்தது, அந்த சேலையை எங்கோ பார்த்திருக்கிறேன். குண்டுப் பூசணி ஒரு நாள்….

அடுத்த பாகத்தில்….

தப்புத் தப்பாய் – 6

தப்புத் தப்பாய் – 5

தப்புத் தப்பாய் – 4

தப்புத் தப்பாய் – 3

தப்புத் தப்பாய் – 2

தப்புத் தப்பாய் – 1

தப்புத் தப்பாய்

Share This Post