தப்புத் தப்பாய்

தப்புத் தப்பாய்

முன்னுரை:

சூனியத்தைத் தேடி அலைந்த பிறகு கொஞ்சம் வேலை பார்க்கலாம் (!) என்று தோன்றியது.
ஆனால் என்னுடைய இனிய நண்பர் பாலா, “சார் சும்மா இருந்தால், மனசு எதையாவது தப்புத் தப்பாய் யோசிக்கிறது, என்ன பண்ணலாம்?”, என்றார். சரி தப்புத் தப்பாய் யோசிக்கிறதயே வேலையாகக் கொண்டிருப்பவர்களுக்கு?!

எதோ ஒரு சாரர் மட்டும் தப்புத் தப்பாய் யோசிக்கிறாங்க, மற்ற எல்லோரும் சரியா யோசிக்கிறாங்களா என்று நீங்கள் கேட்பது சரிதான். பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசயத்திலும் வேறு வேறு கண்ணோட்டம் இருக்கும். எடுத்துக்காட்டாக எனக்கு திருமணத்துக்கு சென்று மொய் செய்வது, நம்ம சாப்பிட்ட சாப்பாடுக்கு அதிகமாகவே பில்லு கொடுக்கிறது மாதிரி தோணும். தப்புத் தப்பாய் யோசித்துவிட்டு மீண்டும் அதையே செய்கிறவர்கள் நாம். ஆனால் நம்முடைய ஒவ்வொரு சின்ன செயலும் நமக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும் இந்த சமூகத்திற்கு சில முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நம் மனம் ஏன் அப்படி யோசிக்கிறது என்பதை வைத்து இந்த தொடரை ஆரம்பிக்கிறோம். சூனியத்தைத் தேடிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை ஆதாரமாகக் கொண்டு, இந்த தொடரும் உங்களுக்கு படிக்கும்போது நிச்சயம் சுவாரஸ்யாமாக இருக்கும் என்று உறுதி கூறி தப்புத் தப்பை ஆரம்பிக்கிறோம்.

Share This Post