நிறம் குணம் – 1

வெண்மை:

எப்பொழுதும் மனது ஒரு போர்க்களமாகவே இருக்கும். யாருடைய மனதையும் கஷ்டபடுத்த விடமாட்டீர்கள். உங்களிடம் உள்ள ஒன்று யாருக்காவது சந்தோஷம் கொடுக்கும் என்றால் உடனடியாக தூக்கி கொடுத்துவிடுவீர்கள். சமூகம் உங்களை நன்கு உபயோகப்படுத்திக்கொள்ளும். பெரிய பதவிகள் உங்களை தேடிவரும். எவ்வளவுதான் உழைத்தாலும் கடைசியில் உங்களிடம் ஒன்றும் இருக்காது. ஏதாவது காரியத்தில் இறங்கவேண்டும் என்றால் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பாராமல் உடனடியாக இறங்கிவிடுவீர்கள், ஒரு கூட்டம் எப்போதும் உங்களை சுற்றி இருக்கும், காப்பி குடித்தால்கூட உங்களுக்கு குறைந்தது 2 பேராவது உடன் இருக்கவேண்டும், உங்களுக்கு இரவு பிடிக்காது, எப்பொழுது விடியும் எப்பொழுது 4 பேரையாவது பார்க்கலாம் என்று இருக்கும். காதல் உங்களுக்கு செட் ஆகாது குடும்பத்தை பொறுத்தவரை சமூகத்தில் கிடைக்கும் மரியாதையைவிட குறைவாகவே கிடைக்கும், உங்களை யாரும் எளிதில் எடை போடமுடியாது.

நீலம்:

நல்ல ரசனையானவர். மென்மையானவர். எளிதில் யாரையும் கவர்ந்துவிடுவதில் வல்லவர். எந்த இடத்திற்கு சென்றாலும் எளிதில் எல்லாரையும் சுற்றி வரவழைத்துவிடுபவர். நிறைய விஷயங்கள் தெரிந்தவர். ஆனால் எந்த ஒரு விசயத்திலும் முழு ஈடுபாடு இல்லாதவர். யாருடைய மனதும் புண்படக்கூடாது என்று பொய்சொல்லகூட தயங்காதவர். எதையும் எளிதாக எடுத்துகொள்பவர். யாரையும் எளிதில் நம்பிவிடுபவர். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதில் உறுதியாக இருப்பவர். உணவு, உடை விஷயத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். விருந்து, சுற்றுலா செல்ல முதல் ஆளாக இருப்பவர். எதிர்பாலினரை எளிதில் கவர்ந்துவிடுபவர். கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்யமாட்டீர்கள். அனால் ஒரு பொறுப்பை உங்களை நம்பி தாராளமாக கொடுக்கலாம். இசை ஆர்வம் உண்டு. சுற்றி உள்ளவர்கள் மனதை எளிதில் படித்துவிடுவீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உங்களை மிகவும் பிடிக்கும். ஆனால் அதை வெளிக்காட்டமாட்டார்கள்.

பச்சை:

எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். எதையும் திட்டமிட்டு செய்யபிடிக்கும். எதிலும் ஒரு ஒழுங்கு நேர்த்தி இருக்கவேண்டும். எல்லாரும் ஒத்துழைத்தால்தான் ஒரு முன்னேற்றம் வரும் என்று தீவிரமாக நம்புகிறவர். சொல்லில் அழுத்தம் இருக்கும். குடும்பபிணைப்பில் கட்டுண்டவர். யாரையும் எளிதில் எடைபோடுபவர். தேவையான அளவுக்குமேல் எதையம் விரும்பாதவர். பொய் சொன்னால் பிடிக்காது. எந்த ஒரு காரியத்துக்கும் பின்புலமாக இருக்க விரும்புபவர். பெரிய பதவிகளை இவரை நம்பி கொடுக்கலாம். வழ வழ, கொழ கொழ என்று இருந்தால் சுத்தமாக தூக்கி எறிந்துவிடுபவர். வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். இவருடன் இருப்பவர்களுக்கு எப்போதும் நன்மைதான். பெரிய தவறு செய்தாலும்

அதைப்பற்றி கவலைப்படாது தூக்கி எறிந்துவிட்டு அடுத்த வேலையை பர்ர்க்க சென்றுவிடுவார். மாற்றம் எப்போதும் பிடிக்கும். இவரை காதலித்தவர்கள் பாவம்தான். ஆனால் இவரால் காதலிக்கபட்டவர்களுக்கு யோகம்தான்.

கருப்பு:

தனித்து நிற்க ஆசைப்படுபவர்கள் தன்னை வித்தியாசப்படுத்த வாழ்க்கை முழுவதும் போராடுபவர்கள். எழுத்து ஆர்வம் இருக்கும். தாராள மனதுடையவர். முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுபவர். நல்ல உழைப்பாளி. தனக்கு சரி என்று தெரிந்தால் மட்டுமே முடிவு எடுப்பவர். உடன் இருப்பவர்களை எரிச்சலடைய செய்பவர். இவரிடமிருந்து ஒன்று கிடைக்கவேண்டும் என்றால் போதும் போதும் என்றாகிவிடும். உணவு, உடை பற்றி கவலைப்படாதவர். எவ்வளவு துயரத்தையும் தாங்கிக்கொள்பவர். இவருடன் இருப்பவர்கள் பாவம்தான். இவரிடமிருந்து ஒன்றும் கிடைக்காது, அறிவுரையை தவிர. இவரிடம் இருந்தால்தானே கொடுப்பதற்கு? திருப்திகரமான வாழ்க்கை இறுதிவரை இவர்களுக்கு இருக்காது. காதல், குடும்பம் இவர்களுக்கு செட் ஆகாது. ஆனால் காதல், குடும்பம் பற்றி நிறைய தெரிந்துவைத்திருப்பார்கள். இவர்களை இவர்கள் போக்கில்தான் விடவேண்டும். திருத்தமுயன்றால் ரணகளமாக்கிவிடுவார்கள்.

மஞ்சள்:

குழப்பவாதி நீங்கள். எல்லோரிடமும் ஒன்றை சொல்லிநம்பவைப்பீர்கள். ஆனால் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள். அழுகை சட்டென்று வந்துவிடும். நீங்களே எதையோ நம்பிக்கொண்டு அதைபார்த்து பயப்படுவீர்கள். சென்டிமென்ட் அதிகம் உள்ளவர். அழகு, சமையல் கலையில் வல்லவர். உங்களைப்பற்றி யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைப்பவர். ஆனால் உங்களாலேயே உங்களை கட்டுப்படுத்தமுடியாது. விஷயத்தை பெரிதுபடுத்துவதில் வல்லவர். எதிர்கால பயம் அதிகம் உள்ளவர். ஜோதிடம், முன்ஜென்மம்,அடுத்தபிறவி ஆகியவற்றில் அதிக நம்பிக்கை உண்டு. நீங்களும் ரிஸ்க் எடுக்கமாட்டீர்கள், உங்களுடன் இருப்பவரையும் ரிஸ்க் எடுக்கவிடமாட்டீர்கள். எதிர்மறை சிந்தனை அதிகம் இருக்கும். தன்னுடைய குடும்பத்துக்காக 24மணிநேரமும் சிந்தனை செய்பவர். பாவம் புண்ணியம் என்று எல்லோரையும் பயமுறுத்துவீர்கள். அதிகமாக அன்பு செலுத்துவீர்கள்.

 

Share This Post