நிறம் குணம் – 2

நிறம் குணம் – 2

சிவப்பு:

இடி, மின்னல்,புயல்,மழை என்று எப்போதும் ஒரு பயங்கரமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருப்பவர். சூழ்நிலை நன்றாக இருந்தாலும், இது இப்படியே இருக்காது என்று மன அமைதியை தொலைத்துவிடுவீர்கள். உங்களுக்கு வெளியில் இருந்து பிரச்னை வரவேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள்தான் பிரச்சனையின் மையம். அடிக்கடி கோபப்படுபவர். ஆனால் உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கும். அதிக சுறுசுறுப்பானவர். ஆனால் அந்த சுறுசுறுப்பில் பிரயோஜனம் இருக்காது. தேவையில்லாமல் அதிக அக்கறை கொள்பவர். நீங்கள் அடுத்து என்ன செய்வீர்கள் என்று உங்களுடன் இருப்பவர்களுக்கு கொஞ்சமும் தெரியாது, ஏன் உங்களுக்கே தெரியாது. நீங்கள் மிகவும் நல்லவர். ஆனால் அதுதான் உங்களுக்கு பிரச்சனையே. என்னதான் உங்களுக்கு சொர்கத்தில் இடம் கிடைத்தாலும் நரகத்தை பற்றியே பேசிக்கொண்டு இருப்பீர்கள். காதலை விட காமம் ரொம்ப பிடிக்கும்.

பிங்க்:

கற்பனை உலகத்தில் வாழ்பவர். நிறைய அழகுணர்ச்சி உடையவர். யாரும் எப்போதும் அழக்கூடாது என்று பிராத்தனை செய்பவர். மிகுந்த இரக்க குணம் உண்டு. எதையும் பார்த்து பார்த்து செய்வதில் விருப்பம் அதிகம், குழந்தைகள் பிடிக்கும். நல்ல வசதியான வாழ்க்கை வாழ விரும்புவீர்கள். பெரிய பதவிகளை ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டீர்கள். பொறுப்புகளை ஏற்க பயப்படுவீர்கள். ரிஸ்க் எடுக்கவேண்டுமென்றால் ஒரே ஓட்டம்தான். அதிக சோம்பேறித்தனம் உண்டு. படுத்து , படுத்து தூங்குவதில் விருப்பம் அதிகம். யாரையும் குறைவாக பேசமாட்டீர்கள். காதல் செய்வதை பார்க்கப்பிடிக்கும். எதையும் வாய் திறந்து சொல்லமாட்டீர்கள். தினசரி வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாதவர். எவ்வளவு நேரமானாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்து ஒன்றுமே செய்யாமல் பொழுதை போக்குவீர்கள். உங்களை எவ்வளவுதான் திட்டினாலும் அசைந்து கொடுக்கமாட்டீர்கள். யாரைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வம் இல்லாதவர். இப்படியும் ஒரு ஜென்மமா என்று உங்களை அடிக்கடி விமர்சனம் செய்வார்கள்.

ஆரஞ்சு:

மிகவும் தெளிவானவர். எது வேண்டும் எது வேண்டாம் என்று எளிதில் முடிவெடுத்துவிடுபவர். யாருடைய விமர்சனத்துக்கும் கவலைப்படமாட்டீர்கள். எப்போதும் என்வழி தனிவழிதான். ஆதாயம் கிடைக்கும் என்றால்தான் எதிலும் இறங்குவீர்கள். ஒருதடவை முடிவு எடுத்துவிட்டால் பின்வாங்கமாட்டீர்கள். உப்புசப்பில்லாத வாழ்க்கை உங்களுக்கு பிடிக்காது. தேடல் எப்போதும் உங்களுக்குள் இருக்கும். எதையும் தெளிவாக விளக்கும் திறன் இருக்கிறது. ஆசிரியராகவோ, மதகுருமாராகவோ செல்லலாம். விளையாட்டில் ஆர்வம் அதிகம். காதலைக்கூட மிகவும் ரசனையாக செய்பவர். நிறைய காதலிப்பீர்கள். நீண்ட காலத்து நண்பர்கள் உண்டு. செண்டிமெண்ட் அதிகம். ஆனால் இல்லததுபோல் நடிப்பீர்கள். மிகவும் தேவையான நேரத்தில்தான் உங்களை வெளிக்காட்டிகொள்வீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எதையும் செய்வீர்கள். இயற்க்கை வழிமுறைகளை பின்பற்றுவதில் விருப்பம் அதிகம்.

பிரவுன்:

எதிர்மறை சிந்தனையாளர். விதிமுறைகளை உடைப்பதில் விருப்பம் அதிகம். தவறான வழியில் புகழ் பெறுவதில் விருப்பம் உண்டு. ஆனால் பயங்கர நியாயமாக பேசுவீர்கள். முன்கோபக்காரர். எல்லாதுறைகளிலும் உள்ளே புகுந்து தெரிந்துகொள்வீர்கள். உங்களை பேசி ஜெயிக்கமுடியாது. எதைக்கேட்டாலும் அதற்க்கு ஒரு பதில் உண்டு. எதிர்பாலினத்தை அன்பால் அடக்கிவைதிருப்பீர்கள் கையில் ஒரு பைசா இல்லாவிட்டாலும் வியாக்கியானம் பேசுவதில் குறை இருக்காது. போதை பொருட்கள் பிடிக்கும். குறைந்தபட்சம் காப்பி, டீ, சிகரட், ஏதாவது ஒன்றுக்காவது அடிமையாக இருப்ப்பீர்கள். இயற்கையாகவே நல்ல உடல்வாகு உள்ளவர்.எதையும் யாரையும் எந்தநேரத்திலும் உதறிவிட்டு செல்வதில் தயங்காதவர். சிற்றின்ப ஆர்வம் அதிகம். ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள தன் எல்லைவரை செல்வதில் துணிச்சல் அதிகம் உண்டு. தன்னுடைய தகுதியை தானே உயர்த்திகொள்வதிலும் தானே தாழ்த்திகொள்வதிலும் உங்களை அடித்துகொள்ளமுடியாது.

கிரே:

எதையும் ஆழ்ந்துபார்த்து நுட்பமாக தேர்ந்து எடுப்பதில் வல்லவர். உங்களுடைய டேஸ்ட் எப்பவும் ரிச்சாக இருக்கும். உங்களுடைய நண்பர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அனைவரும் உங்களை போலவே ஜீனியசாகவே இருப்பர். எளிதில் காதலிக்கமாட்டீர்கள். ஆனால் காதலில் விழுந்தால் ரொம்ப டீப்பாக போய்விடுவீர்கள். மிகவும் நாகரிகமாக நடந்துகொள்ளப்பிடிக்கும். உங்களுடன் இருப்பதையே மற்றவர்கள் பெருமையாக நினைப்பார்கள். உடை தேர்ந்து எடுப்பதிலும் நேர்த்தியாக அணிந்துகொள்வதிலும் உங்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. ரிஸ்க் எடுப்பது உங்களுக்கு ரஸ்க் சாபிடுவது மாதிரி. கையில் பைசா இல்லாவிட்டலும் பந்தாவுக்கு குறைச்சல் இருக்காது. விவாதம் செய்வதில் விருப்பம் அதிகம். கடவுளே வந்தாலும் வந்துபார் என்பவர். யாரையும் ஏமாற்றமாட்டீர்கள். ஏமாற்றத்தையும் தாங்கமுடியாது. எதிர்கால பயம் இருந்தாலும் வெளியில் காட்டிகொள்ளமாட்டீர்கள். பணவிஷயத்தில் நிர்வாகத்திறன் போதாது. வெட்டி வேலைகளிலும் அவசியம் ரிஸ்க் எடுக்கவேண்டுமா?

Share This Post