நிறம் குணம் – 3

நிறம் குணம் – 3

நம்முடைய வெற்றுபக்கத்தில் நிறம் குணம் என்ற தலைப்பில் பத்து நிறங்கள் அவர்களின் குணங்கள் பற்றி கொடுத்து இருந்தோம். அமோகமான வரவேற்பு இருந்தது. இன்றும் சிலர் எப்படி சொல்கிறீர்கள் என்று வியப்புடன் கேட்கிறார்கள். அது ஒரு சிதம்பர ரகசியம் என்று பெருமை பீற்றிகொள்ளமாட்டோம். சும்மா ஒரு உள்ளுணர்வு சொல்கிறது அதை பின்பற்றி போடுகிறோம். நிறைய ரசிகர்கள் லைட் புளு அல்லது ஸ்கை புளு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். நாம் நீலம் என்ற பொதுவான தலைப்பில் கொடுத்து இருந்தோம். இதோ அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க.

LIGHT BLUE OR SKY BLUE:

             அது எப்படிங்க கை நெறைய திறமைய வச்சுக்கிட்டு சும்மா சுத்திகிட்டு இருக்கீங்க? வாழ்க்கைல எதையும் ஈசியா எடுத்துக்கவேண்டியதான், அதுக்காக வாழ்க்கையவே ஈசியா எப்படி எடுத்துகிறீங்க? உங்களை யாராவது எப்பவும் தூண்டிகிட்டே இருக்கணுமா? அப்பதான் சாதிக்கணும்னு நினைப்பீங்களா? யாரையும் ஈசியா புரிஞ்சுக்கிறீங்க, ஆனால் உங்களுடன் ஒரு ஜன்மம் பழகினாலும் உங்களை புரிஞ்சிக்கிட்டா அது இமாலய சாதனைதான். அது எப்படி எந்த விஷயத்தைபற்றியும் பேசுறீங்க? உங்களோட இருப்பவங்களுக்கு எப்பவும் சந்தோசம்தான். ஆனால் நீங்கள் உண்மையிலேயே சந்தோசமாக இருக்கீறீர்களா? நிச்சயமாக கிடையாது, நல்லா நடிப்பீங்க சந்தோசத்தை நீங்கதான் குத்தகைக்கு எடுத்தமாதிரி! மேக்கப்ல உங்களுக்கு அவ்ளோ ஆர்வம் இல்லை ஆனால் ரொம்ப அழகா இருப்பீங்க. சிம்பிள் பியுட்டினு சொல்வாங்களே அது நீங்கதான். முதல்ல உங்களோட அழகு யாருக்கும் தெரியாது. உங்களோட பேச்சு திறமைல இழுக்கபட்டவங்க உங்களிடம் நன்றாக பழகினவுடன்தான் உங்களோட அந்த எளிமையான அழகை கவனிப்பாங்க. உங்களோட கண்கள் ரொம்ப ஆழமானவை, அழகானவை. அதிலிருந்து எந்த விஷயமும் தப்பமுடியாது. காதலை ரசிப்பீங்க, மனசுக்குள்ள நெறைய காதல் வரும் ஆனால் போகாது. எப்பவும் அந்த காதல் பசுமையா இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் அதை உயிர்ப்பித்து கொள்வீர்கள். உங்களுக்கு அவ்ளோ இரக்கமான மனசு. ஆறு வயசு பிள்ளைல இருந்து அறுபது வயசு வரை யாரையும் ரொம்ப ஈசியா இழுத்துருவீங்க. உங்களுக்குன்னா எல்லாரும் நீங்க கேக்காமலேயே விழுந்து விழுந்து உதவி செய்வாங்க. உங்களுக்கு பெரிய லட்சியம் ஒன்றும் கிடையாது. உங்களை சுற்றி உள்ளவர்கள் அவர்களுடைய லட்சியத்தை அடைய நீங்கள் ஒரு முக்கிய காரணமாக இருப்பீர்கள். பொருள் கொடுத்து உதவி செய்யாவிட்டாலும் மற்றவருடைய மனக்கஷ்டத்துக்கு மயிலறகால மருந்து போடுவீங்க. தற்கொலை எண்ணம் உள்ளவங்க கூட உங்கட்ட வந்து கொஞ்ச நேரம் பேசினால் போதும், அதுக்கப்புறம் செம ஜாலியான ஆளா மாறிடுவாங்க அவ்ளோ பவரு உங்க பேச்சில்! உங்க மனசுல அடிக்கடி ஒரு வெறுமை இருந்துகிட்டே இருக்கும். ஆனால் வெளிய காட்டமாட்டீங்க. உங்களைவிட நல்ல மெச்சுரிட்டியான ஒரு ஆளு உங்களுக்கு கிடைச்சா அப்டியே உருகிடுவீங்க, ஆனால் அப்படி கிடைப்பது கஷ்டம்தான். கிடைத்தால் உங்க அதிர்ஷ்டம்தான், அவங்களை விடாதீங்க.

Share This Post