பறவையை கண்டான்…….

பறவையை கண்டான்…….

நம்முடைய மக்கள் மனதில் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றால் தாமஸ் எடிசனும், நியூட்டனும் மற்றும் பல அயல் நாட்டவர்கள்தான் தோன்றுகிறார்கள். ஆனால் நம்முடைய பாரதத்தின் அறிவு பொக்கிஷங்களாக நிறைய பேர் இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் அயல் நாட்டவரை தலையில் தூக்கிவைத்து ஆடும் நாம் நம்மவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதில்லை. ஒரு சின்ன எடுத்துக்காட்டு பார்ப்போம்.

விமானம் என்றால் நமக்கு ரைட் சகோதரர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு பரத்வாஜர் என்ற ரிஷியை பற்றி தெரியும்? விமான சாஸ்த்திரம் என்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை சூத்திரங்கள் மூலம் போதானந்த விருத்தி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணில் செல்லும் வாகனங்களை தயாரிக்கும் முறைகள் பற்றி எழுதியுள்ளார். எப்படிப்பட்ட உலோகத்தை பயன்படுத்த வேண்டும்? அதற்கு தேவையான பாகங்கள் எவை? அதை ஓட்டுகின்றவர் எப்படி பயிற்சி செய்யவேண்டும்? எந்த விசயங்களை கவனமாக அறிய வேண்டும் என்றும் விவரமாக கொடுத்துள்ளார். மேலும் நாம் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் மூன்று அடுக்குள்ள விமானத்தை உருவாக்குவது எப்படி என்று விளக்கமும் கொடுத்துள்ளார்.

மேலும் விமானத்தின் உதவியால் உலகின் பல பாகங்களை எப்படி சுற்றி வரலாம்? பொருட்களை எப்படி ஏற்றி செல்வது போன்ற விவரங்களையும் கொடுத்து அசத்தியிருக்கிறார். இந்த குறிப்புகளை அடிப்படையாக கொண்டு மும்பை நகரில் ஒரு விஞ்ஞானியர் தம்பதி மருத்சவம் என்ற விமானத்தை தயாரித்தனர். அவ்விமானத்தில் ஏறி சூரிய சக்தியை பயன்படுத்தி இரண்டாயிரம் அடி உயரம் பறந்து சென்றனர். அது வெகுதூரம் சென்று பின் கடலில் விழுந்தது. இதுதான் நம்முடைய நாட்டில் நடந்த முதல் விமான பயணமாகும். இது 1865 ஆம் ஆண்டு நடந்தது.

மேலும் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புஷ்பகவிமானம் என்பதும் வெறும் கற்பனை என்று நம்மால் ஒதுக்கமுடியாது. நம்முடைய முன்னோர்கள் அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் இந்த உலகத்துக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள் என்றால் நாம் மிகவும் பெருமிதம் கொள்வதில் தப்பில்லை.

Photo Courtesy : arbroath blogspot

Share This Post