பிதாகரஸ் முதலில் கண்டறிந்தவன் – தமிழனே

பிதாகரஸ் முதலில் கண்டறிந்தவன் – தமிழனே

படித்த எல்லாருக்கும் பிதாகரஸ் கோட்பாடு(Pythagoras Theorem) என்பது தெரிந்த ஒன்றே, பிதாகரஸ் கோட்பாடு படிக்காமல் யாரும் பள்ளிப்படிப்பை முடித்திருக்க முடியாது.

பிதாகரஸ் கோட்பாடு என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் 495BC கண்டறிந்தார். அவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் தமிழ் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

“ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே”
– போதையனார்

விளக்கம்:

இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும் என்பதேயாகும்.

தமிழன் ஒரு வேலை கற்றலையும் கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால்… அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்.

Share This Post