பொருட்களை உபயோகிப்போம் மனிதர்களை நேசிப்போம்

பொருட்களை உபயோகிப்போம் மனிதர்களை நேசிப்போம்

ஒரு குட்டிக்கதை: ஒரு அப்பாவும் பையனும் ஹால்ல உட்க்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. அம்மாவும் பொண்ணும் சமையலறையில் வேலை பார்த்துகொண்டிருந்தாங்க. அப்ப சமையலறையிலிருந்து ஒரு கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்து உடைந்த சத்தம் கேட்டது. 5 வினாடி கழித்து அப்பா மகனிடம் சொன்னாரு “உன்னோட அம்மாதான் கீழே போட்ருப்பா என்று. மகன் கேட்டான் “அதெப்படி சொல்றீங்க?” அதுக்கு அப்பா சொன்னாரு “உன்னோட அக்கா போட்ருந்தா இந்நேரம் உன்னோட அம்மா கத்தி ஊரகூட்டிருக்கமாட்டா?”

நம்ம நம்மளோட நெருங்குன உறவுமுறைகளையே எப்படி எடுத்துகிறோம்னா இவங்களால நமக்கு என்ன உபயோகம்னு பார்க்கிறோம். ஆனா உபயோகப்படுத்தவேண்டிய பொருட்களை மிகவும் நேசிக்கிறோம். ஒரு பொம்மைய உடைச்சிட்டு எதுக்காக ஒரு குழந்தை பதறி நிக்குது? பெற்றோர்கள் வசவு உரிச்சிருவாங்கன்னுதான? நம்மளோட செல்போன் ஸ்க்ரீன்ல ஒரு சின்ன கீறல் விழுந்தா தூக்கம் வரமாட்டேங்குது, ஆனால் நம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டா ரொம்ப கவலைபடுறோமா?

இன்னொரு குட்டிக்கதை: ஒருத்தரு ஒரு பெரிய அழகிய ஜாடி வச்சுருந்தாரு. அதை யாரையும் தொடவிடமாட்டரு. அதை தொட்டால் தன்னோட மனைவி, மகள், மகன் எல்லோரிடமும் எரிந்து விழுவாரு. இப்டியே 30 வருடங்கள் போயிற்று. திடீர்னு ஒருநாள் அவரே அந்த ஜாடியை கீழே போட்டு உடைச்சிட்டாரு. இவ்வளவு நாளு என்னுடன் இருந்த உயிருள்ள என் அன்பு குடும்பத்தை நேசிக்காமல் இந்த பொருளையா நேசித்தேன் என்று வெட்க்கப்பட்டார்.

இந்த அவசர உலகத்தில நெறைய பொருட்களை சம்பாதிக்க ஆசைபடுகிறோமே தவிர நல்ல மனிதர்களை சம்பாதிக்க விரும்புவதில்லை.

எந்த கல்லூரி மாணவனிடமும் கேளுங்கள் வீடு வாங்கணும், கார் வாங்கணும் அப்டிங்கிறதுதான் அவனுடைய லட்சியமாய் இருக்கும். எங்க சொந்தக்காரங்க சிலர் கருத்துவேறுபாட்டால் பிரிஞ்சு இருக்காங்க அவங்கள மறுபடியும் ஒன்னுசேர்க்கணும், நம்ம மக்களுக்கு எதாவது நல்லது செய்யணும், எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் படிக்க வசதி இல்லாமல் கஷ்டபடுறான் அவனுக்கு உதவணும்னு சொல்றானா?

கொஞ்சம் சிந்திப்போம் மனிதர்களை நேசிப்போம், பொருட்களை உபயோகப்படுத்த மட்டுமே செய்வோம்.

Share This Post