மச்சம்டா….

மச்சம்டா….

நம் உடலில் உள்ள மச்சங்களும் அதற்குரிய பலன்களும் நாம் வாய் வலிக்க (இனிக்க) பேசுவோம். அதுவும் ஆண்களிடம் கேட்டுப்பாருங்கள் சில முக்கியமான(!) நிகழ்வுகளுக்கு உனக்கு உடம்பு முழுக்க மச்சம்டா என்று சொல்வார்கள். மச்சம் என்பது உடம்பிலுள்ள இறந்த செல்களின் தொகுப்புதான் என்று அறிவியல் சொன்னாலும் அதைப்பற்றி பேசுவது எல்லாருக்கும் ரொம்ப சுவாரசியமான விஷயம்தான். சில பெண்களுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மச்சம் இருக்கும்போது அது அழகுக்கு அழகு சேர்க்கும். சிலர் மச்சம் இல்லையே என்று மிகவும் கவலைப்படுவார்கள். நம் கண்களுக்கு தெரியாத இடத்தில் மச்சம் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கையும் உண்டு. நம்ம பங்குக்கு மச்சம் எங்கு இருந்தால் என்ன பலன் என்று சில தகவல்கள் கொடுத்து இருக்கிறோம்.

மச்சம் உள்ள இடம்         பலன்கள்

நெற்றி நடுவே             புகழ், கம்பீரம், பதவி, அந்தஸ்து.

நெற்றி வலதுபுறம்        தைரியம், யாருக்கும் அடங்காதவங்க

நெற்றி இடதுபுறம்        அற்ப குணம், டென்ஷன், சட்டுன்னு கோபம் வரும்

மூக்கின் மேல்            செயல்திறன், பொறுமைசாலி.,

மூக்கின் இடதுபுறம்      கூடா நட்பு, பெண்களிடம் ஜாக்கிரதை

மூக்கின் நுனி            வசதியான வாழக்கை, திடீர் சறுக்கல்

மேல், கீழ் உதடுகள்       ஒழுக்கம், உயர்ந்த குணம்,

மேல் வாய் பகுதி           அமைதி, அன்பான கணவர்,

இடது கன்னம்           வசீகரம், விரும்பியதை அடையும் வேகம்

வலது கன்னம்            படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை,

வலது கழுத்து            பிள்ளைகளால் யோகம்,

நாக்கு                    சொன்னது நடக்கும்., கலைஞானம்,

கண்கள்                  கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்,

இடது தோள்              சொத்து சேர்க்கை, தயாள குணம்,

தலை                    பேராசை, பொறாமை குணம்,

தொப்புளுக்கு மேல்        யோகமான வாழ்க்கை,

தொப்புளுக்கு கீழ்          மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள்                  ஆடம்பரம், படாடோபம்,

வயிறு                    நல்ல குணம், நிறைவான வாழ்க்கை.

அடிவயிறு                ராஜயோக அம்சம், உயர்பதவிகள்.

இடது தொடை            தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்.

வலது தொடை            ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

என்ன உங்களுக்கு சரியா இருக்கா? இருந்தா ஷேர் பண்ணுங்க, இல்லைனா நமக்கு மச்சமில்ல(!)னுட்டு கமென்ட் பண்ணுங்க.

Share This Post