மன்னிக்கவும்…..

மன்னிக்கவும்…..

மகளிர்களை கொஞ்சமாவது புரிந்துகொள்வோம்,

21 வயதுமுதல் 25 வயதுவரை உள்ள பெண்களைப பற்றி உளவியல் ரீதியாக சமீபத்தில் வலை தளத்தில் படித்ததை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம், அவர்களை உளவியல் ரீதியாக புரிந்துகொள்வதற்கு.

தயவுசெய்து ஆண்கள், பெண்கள், பெற்றோர்கள் கணவன்மார்கள், சகோதரர்கள், காதலர்கள் என அனைவரும் படிக்கவும்.

1) காதலிக்கும் பெண்கள் காத்திருக்க சொல்லும் காதலனுக்கும், கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்டச் சொல்லும் தந்தைக்கும் இடையில் ஒரு தொடர் மனப் போராட்டத்தில் இருக்கிறார்கள்.

2) வேலை தேடி அலையும் போதும், பெண்களெல்லாம் கல்யாண பத்திரிக்கையில் போட்டுக்கொள்ளத் தானே பட்டம் வாங்குனீர்கள் என்று நகைக்கும் ஆண்களை ஒற்றைப் புன்னகைச் சிந்தி கடந்து செல்கிறார்கள்.

3) மல்லிகை பூவையும், கண்ணாடி வளையலையும், சுடிதாரையுமே அதிகம் விரும்பினாலும், வேலைக்கென ஒரு வேடம் போட்டுக் கொள்கிறார்கள்.

4) பேசாவிட்டால் உம்மனாமூஞ்சி என்று பெயரும். கொஞ்சம் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிட்டால் படித்த திமிர் என்ற பட்டமும் வாங்குகிறார்கள்.

5) 20 வயதுவரை சமையலறை பக்கம் கூட செல்லாமல் இப்போது அவர்கள் அதிக நேரம் செலவழிப்பது சமையல் அறையாகத்தான் இருக்கும்.

6) முகப் பருக்களுக்கு கவலைப்படுவதை பகுதி நேர வேலையாக வைத்திருக்கிறாகள்.

7) ஊரைப் பிரிந்து ஏதோ ஒரு பெண்கள் விடுதியில், ஆயிரம் பெண்கள் சூழ்ந்திருக்கையிலும் தனிமையில் இருப்பதாய் உணர்கிறார்கள்.

அடிக்கடி ச்சே ஊரா இது, எங்க ஊரெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? என்ற வசனத்தை யாரிடமாவது சொல்லிக் கொண்டே இருகிறார்கள்

9) சொந்தங்கள் சேர்ந்த சுப நிகழ்ச்சுகளில், மாமாக்கள் எல்லாம் கல்யாணம் எப்ப? அத்தைமார்கலெல்லாம் எத்தனை பௌன் சேர்த்து வச்சுருக்கன்னு ? கேட்கும் கேள்விகளுக்கு என்ன சொல்ல என்று தவிக்கிறார்கள்..

10) அம்மாவையும், அப்பாவையும் இரு சக்கர வண்டியில் ஏற்றிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள்..

11) புதிதாய் செல்லும் இடங்களில் மனதில் இருக்கும் பயம் கண்களில் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருந்து .ஒரு ஆணைப் போல் நடந்துக் கொள்ள முடிந்த அளவு முயற்சி செய்கிறார்கள்.

12) வெளியில் சென்று வீடு திரும்பியதும், பேருந்தில் இடிபட்டதையும், மொபைல் நம்பர் கேட்டு பின்னால் வந்த ஆணை பற்றியும் வீட்டில் மூச்சு விட மாட்டார்கள்.தேவையற்ற பயத்தை அவர்களுக்கு தரவேண்டாம் என்ற காரணம்தான்.

13) உங்களுக்கென ஒரு கனவு உண்டா? என்பதை சுற்றி இருக்கும் யாரேனும் கேட்கமாட்டார்களா என ஏங்குவார்கள்.

14) எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்து இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் பெண் என்பதால் வந்த வாய்ப்பு என்றுச் சொல்ல வாய்கள் அதிகம் காத்திருக்கும்.

15) எத்தனை சோகம் கண்ட போதிலும், பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்கிறார்கள்.

16) அப்பா அதட்டி ஒரு சொல் சொல்லிவிட்டால் கலங்கிடும் கண்கள், அலுவலகத்தில் யார் முன்போ திட்டு வாங்கி விட்டால் கூட கொஞ்சமும் கலங்காது. அழுதால் அதற்கும் இந்த உலகம் நீலிக்கண்ணீர் என்றொரு பெயர் வைக்கும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் புரிஞ்சிகிட்டு அவர்களை ஒரு மனுஷியாக பார்க்கவேண்டும். தலையில் தூக்கி கொண்டாடாவிட்டாலும் அவர்கள் விஷயத்தில் தேவை இல்லாமல் தலையிடாமல் இருந்தாலே போதும்.

Photo Courtesy: Yelena Novgorodskaya

Share This Post