மலரும் மனமும் – 2

மலரும் மனமும் – 2

மலரும் மனமும் என்ற எங்களுடைய படைப்பிற்கு நிறைய பாராட்டுக்களும், வழக்கம்போல கொஞ்சம் வசவுகளும் வந்தன. அதைவிட முக்கியமாக எப்படி இப்படி சொல்கிறீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் முல்லைப்பூவிற்கு ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். மன்னிக்கவும் அது மறந்துவிட்டது, இதோ உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க….

முல்லைப்பூ:

அழகாக வாழ்க்கையை திட்டமிட்டு நடத்தனும்னு உங்களுக்கு ஆசை, ஆனால் அது உங்கள் கையிலிருந்து நழுவி ஓடிக்கொண்டேதான் இருக்கும். சின்ன சின்ன ஆசைகள்தான் உங்களுடையது. ஆனால் அதை ஏதாவது தடுத்துக்கொண்டே இருக்கும். தேவை இல்லாமல் பணத்தையும், நேரத்தையும் செலவழிக்க மாட்டீர்கள். சொன்னா சொன்ன நேரத்துக்கு இருக்கணும் இல்லேனா சொல்லக்கூடாது என்று அடிக்கடி சொல்வீர்கள். உங்களை நிறைய பேர் தப்பாகத்தான் புரிந்து வைத்திருப்பார்கள். போலித்தனம் உங்களுக்கு கொஞ்சமும் பிடிக்காது. வட்டம் போட்டு, திட்டம் போட்டு, கட்டம் போட்டெல்லாம் வாழணும்னு நினைப்பீர்கள். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது என்று நாற்பது வயது வரை நினைப்பீர்கள். அதன் பிறகு எதுவும் நம் கையில் இல்லை என்ற முடிவுக்கு வருவீர்கள். எளிமையான அழகு உங்களுக்கு மிகவும் பிடிக்கும். எப்பவும் மனசுக்குள் ஏதாவது கணக்கு ஓடிக்கொண்டே இருக்கும். நீங்கள் பெண்ணாக இருந்தால் பெண்களுக்கு நிறைய ஆலோசனை சொல்வீர்கள். எளிதில் ஆண்களை நம்பமாட்டீர்கள். உங்களுடைய துணை உங்களை நம்பி எந்த பொறுப்பையும் கொடுக்கலாம். ஆனால் கொடுக்கமாட்டார்கள்.

மலரும் மனமும் – 1   படிக்க…

Share This Post