ருத்ராஷம் : அறிந்ததும் அறியாததும்

ருத்ராஷம் : அறிந்ததும் அறியாததும்

ருத்ராஷம் பற்றி சில சுவையான தகவல்கள்:

ருத்ராஷம் சிவபெருமானின் கண்ணில் இருந்து உண்டானது, அதனால்தான் அதை ருத்ரா (அ) ஷம் என்கிறோம். அஷம் என்றால் ‘கண்’ என்று பொருள்.

ருத்ராஷம் என்பதற்கு, ‘சம்சார துக்கத்தை நீக்கும்படியான அருள்பார்வை’ என்று பொருள்.

ருத்ராஷத்தின் மேலே உள்ள கோடுகளைக் கொண்டு அது எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.

அதன் முகங்களின் எண்ணிகையை வைத்து அது எந்த தெய்வத்தை குறிக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

ஒரு முகம் – சிவன்

இரண்டு முகம் – அம்பிகை

மூன்று முகம் – அக்னி

நான்கு முகம் – பிரம்மா

ஐந்து முகம் – காலாக்னி ருத்ரர்

ஆறு முகம் – சுப்ரமண்யர்

ஏழு முகம் – மன்மதன் மற்றும் ஆதிசேஷன்

எட்டு முகம் – விநாயகர்

ஒன்பது முகம் – பைரவர்

பத்து முகம் – விஷ்ணு

பதினோரு முகம் – ஏகாதச ருத்ரர்

பன்னிரண்டு முகம் – துவாதச ஆதித்யர்

பதிமூன்று முகம் – ஆறுமுகர்

பதினான்கு முகம் – சிவனும் சக்தியும் இணைந்த வடிவம்

பதினைந்து முகம் – சதாசிவர்

பதினாறு முகம் – ஆனந்தேசுவரர்

108, 54, 27 என்ற ஏதாவது ஒரு எண்ணிக்கையில் ருத்ராஷத்தை மாலையாக கோர்த்து அணியலாம்.

ருத்ராஷத்தில் தங்கச்சத்து இருப்பதால் அது உடம்பில் படுவதாலும், அதன் மேல் பட்ட தண்ணீர் நம் உடம்பில் படுவதாலும், நோய்கள் வருவதை தடுப்பதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

ருத்ராஷத்தைத் தேனில் குழைத்து மூன்று வேளைகள் கொடுத்தால் தீராத காய்ச்சல் நீங்கும்.

கடுமையான தாகம், நீங்காத தோஷம், பித்தம், விக்கல், கபம் ஆகியவையும் ருத்ராஷ வைத்தியத்தின் மூலம் நீங்கும் என்று தேரையர் கூறுகிறார்.

Share This Post