விஷயம்? விஷேஷம்? விஷமம்?….

விஷயம்? விஷேஷம்? விஷமம்?….

இந்தப் பகுதியில் விஷயம் ஒன்றும் இருக்காது ஆனா ரொம்ப விஷேஷமாக இருக்கும். ஒரு டீ குடிக்கிற நேரத்தில இதை படிச்சிரலாம், சில வாக்கியங்கள் உங்கள் டீயை விட தீயா இருக்கும்.

  • தொலைதூரக்கல்வி படிக்கும் 45வயது பெண் தேர்வுக்கு முதல்நாள் சொல்கிறாள் “இன்னும் சுத்தமாக புக்கை தொடவே இல்லை என்று!” நம்பிட்டோம் மேடம் பள்ளிகூடத்திலிருந்து நீங்க சொல்றத நம்பித்தான படிக்காம நாங்க வீணாபோனோம்.
  • வீட்டிலிருந்து பைக்கில் 5கி.மீ சென்றவுடன் எதிரில் வந்தவன் சொன்னான் ஹெட்லைட் எரியிதுன்னு… அப்ப இவ்வளவு தூரம் என்னைய ஒருத்தனும் மனுசனாவே மதிக்கலையா… மீண்டும் ஒருமுறை இதுமாதிரி நடந்தால் நான் நாட்டைவிட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை…
  • உச்சியில் குங்குமம் வைக்கும் பெண்களை பார்த்தால் கேட்கத் தோன்றுகிறது “ நீங்க ஹிந்தி மெகா சீரியல் ரொம்ப பார்பீங்களானு?”
  • உயிரே இல்லாமல் கேட்கப்படும் கேள்வி “அப்புறம் எப்படி இருக்கீங்க?”
  • இதுவரை என் வாழ்நாளில் நான் கேட்காத வாக்கியம் “என்ன மறுபடியும் செத்துட்டானா?!”
  • பல்பு வாங்கிட்டு வந்ததில் கூட பல்பு வாங்கிட்டேன் “பாழாய்ப்போன கடைக்காரன் fuseபியுஸ் போன பல்ப கொடுத்துட்டான்”
  • தெரிஞ்ச ஒருத்தரு நாயோட எதிரில் வாகிங் வந்தாரு பார்த்தும் பார்க்கதது மாதிரி போனாரு, அந்த நாய் என்னைபார்த்து அடையாளம் கண்டு வாலாட்டியது. இவ்ளோ நாள் வேஸ்ட் பண்ணிட்டேன் அந்த நாய்கூடவே பழகிருக்கலாம்.
  • Height of insult: 3 இளைஞர்கள் என்னை 3 மணி நேரமாக பின்தொடர்கிறார்கள் ஒரு பிஸ்கட் பாக்கெட்டாவது வாங்கி போடவேண்டும்…..
  • Height of confidence: யானை நின்றுகொண்டு இருக்கும்போது அதன் நான்கு கால்களுக்கிடையில் உள்ள நிழலில் தூங்கும் யானைப்பாகன்.
  • நக்கலின் எல்லை: தேசிய நெடுஞ்சாலையில் உயரமான அறிவிப்பு பலகையில் உள்ள வாசகம் “ if you read this while you travelling you may meet an accident”

இதில் எங்கள் சொந்த சரக்கும், சுட்ட சரக்கும் உள்ளது.

Share This Post